சர்ச்சையைக் கடந்து செல்ல சிங்கப்பூர் விரும்புகிறது

டெல்லி முதல்வரின் ஆதாரமற்ற பொய்யான கருத்து

சிங்­கப்­பூர் அர­சாங்­கம், கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் தடுத்து நிறுத்­தும் தலை­யா­ய பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது.

மற்­றொரு கிரு­மிப் ­ப­ர­வல் ஏற்­பட்டுவிடக்­கூ­டாது என்­ப­தில் அது முழுக் கவ­னம் செலுத்தி வரு­கிறது.

இவ்­வே­ளை­யில் டெல்லி முதல்­வ­ரின் சர்ச்­சைக்­கு­ரிய கருத்து­க­ளால் கொவிட்-19க்கு எதி­ரான கவ­னத்தை சித­ற­விட விரும்­ப­வில்லை என்று இந்­தி­யா­வுக்­கான சிங்­கப்­பூர் தூதர் தெளிவுப­டுத்­தியுள்ளார்.

சிங்­கப்­பூ­ரில் புதிய உரு­மா­றிய கிருமி தென்­ப­டு­வ­தாக இந்­திய அர­சி­யல்­வாதி ஒரு­வர் தெரி­வித்த கருத்­து­க­ளால் எழுந்­துள்ள துர­திர்ஷ்­ட­வ­ச­மான அத்­தி­யா­யத்தைக் கடந்து செல்ல விரும்­பு­வ­தா­க­வும் புதன்­கி­ழமை அன்று சிங்­கப்­பூர் தூதர் சைமன் வோங் தெரி­வித்­தார்.

டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்த கருத்­துக்கு இந்­திய அர­சாங்­கம் மறுப்பு வெளி­யிட்­டுள்­ளது.

இத­னால், சிங்­கப்­பூர் இதி­லி­ருந்து விலகி அடுத்த கட்­டத்­துக்கு நகர விரும்­பு­வ­தாக திரு வோங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் சொன்னார்.

குறிப்­பாக இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­க­ரின் டுவிட்­டர் பதி­லால் மன­நி­றைவு பெறு­வ­தா­க­வும் அவர் கூறினார்.

டாக்­டர் ஜெய்­சங்­கர், முன்பு சிங்­கப்­பூ­ரில் இந்­தி­யா­வுக்­கான தூத­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர்.

டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வா­லின் கருத்து பொறுப்­பற்­றது என்­றும் அத­னைப் புறக்­க­ணிக்க வேண்­டும் என்­றும் டுவிட்­டர் பதி­வில் கூறி­யி­ருந்த திரு ஜெய்­சங்­கர், கொவிட்-19க்கு எதி­ரா­னப் போராட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் உறு­தி­யான பங்­கா­ளி­கள் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

டெல்லி முதல்­வர் இந்­தியா சார்­பில் பேச­வில்லை என்­ப­தை­யும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

"இந்த விவ­கா­ரத்­தில் இந்­திய அர­சாங்­கத்தை பிர­தி­நி­திப்­ப­வர்­களே பேசி பதி­ல­ளித்து தெளி­வு­ ப­டுத்­தி­விட்­ட­தால், இந்த சர்ச்­சைக்கு முடிவு கட்ட விரும்­பு ­கிறோம்," என்றார் திரு வோங்.

டெல்லி முதல்­வர் அண்­மை­யில் வெளி­யிட்ட உண்­மை­யில்­லாத கருத்­தால் புதிய சர்ச்சை வெடித்­தது.

இந்தி மொழி­யில் வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வில் சிங்­கப்­பூ­ரில் உரு­மா­றிய கிருமி, குழந்­தை­ களுக்கு தீங்கு விளை­விக்­கும் என்­றும் அது இந்­தி­யா­வில் 3வது கிரு­மித்­தொற்று அலையை ஏற் ­ப­டுத்­தக்கூடும் என்றும் அர­விந்த் கெஜ்­ரி­வால் கூறி­யி­ருந்­தார்.

இது குறித்து மேலும் பேசிய சிங்­கப்­பூர் தூதர் வோங், "முக்­கிய அர­சி­யல்­வா­தி­கள் பொறுப்­பற்ற முறை­யில் பொய்­யான கருத்து­களை வெளி­யி­டக்­கூ­டாது. இதே போன்ற கருத்தை அர­விந்த் கெஜ்­ரி­வால் மீண்­டும் வெளி­யிட்­டால் 'பொஃப்மா' எனும் இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டத்­தின் மூலம் நட­வ­டிக்கை எடுக்க சிங்­கப்­பூ­ருக்கு உரி­மை­யி­ருக்­கிறது," என்­றார்.

சிங்­கப்­பூர் ஒட்­டுெ­மாத்த நாடு­க­ளு­டன் சேர்ந்து கொவிட்-19க்கு எதி­ராக போரா­டவே விரும்புகிறது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­தியா, தற்­போது 2வது கிரு­மிப் பர­வல் அலை­யால் மிக­வும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் உட்­பட 40க்கும் மேற்­பட்ட நாடு­கள் இந்­தி­யா­வுக்கு முக்­கிய உயிர் காக்­கும் உத­விப்­பொ­ருட்­களை வழங்கி வரு­கின்­றன.

சுமார் 8,000 உயிர்­வாயு உற்­பத்தி சாத­னங்­கள், 12,000 உயிர்­வாயு தோம்­பு­கள் மற்­றும் 64 உயிர்­வாயு சேமிப்பு கலன்­களை இந்­தி­யா­வுக்கு சிங்­கப்­பூர் அனுப்­ப­வி­ருக்­கிறது.

"சிங்­கப்­பூ­ரின் உத­வி­யால் டெல்­லியே அதி­கம் பல­ன­டை­கிறது.

"இந்­நி­லை­யில் டெல்லி முதல்­வ­ரின் பேச்சு எங்­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்­தது. ஆனால் இந்த விவ­கா­ரத்­தால் சிங்­கப்­பூ­ரின் உதவி நின்­று ­விடாது," என்று சிங்கப்பூர் தூதர் வோங் உறுதியளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!