இந்தியாவில் பரவும் கறுப்பு பூஞ்சை அபாயம்

இந்தியாவில் பரவும் கறுப்பு பூஞ்சை அபாயம்

2 mins read
8df63cc6-92e5-476e-8a09-8bb89e58d2cc
கொரோனா தொற்று ஏற்பட்டு கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ஜபல்பூரில் உள்ள என்எஸ்சிபி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. படம்: ஏஎஃப்பி -

இந்­தியா, ெகாவிட்-19 தொற்­றி­ல்­இருந்து மீண்டுவர போரா­டிக் கொண்­டி­ருக்­கும் வேளை­யில் கறுப்பு பூஞ்சை எனும் புதிய தொற்று நாடு முழு­வ­தும் பர­வு­வதால் புதிய அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது.

குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கண்­ட­றி­யப்­பட்ட 'மியூ­கோர்­மை­கோ­சிஸ்' எனும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு தமி­ழ­கத்­தி­லும் நுழைந்­து உள்­ளது.

இதை­ய­டுத்து கறுப்பு பூஞ்சை பாதிப்பை புதிய தொற்­றாக அறி­விக்­கும்­படி மாநில அர­சுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட சுற்­ற­றிக்­கை­யில் தொற்­று­நோய் சட்­டத்­தின்கீழ் கறுப்பு பூஞ்­சையை வகைப்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக என்­டி­டிவி தெரி­வித்­தது.

இத­னால் மாநி­லத்­தில் கறுப்பு பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர் ­களின் விவ­ரங்­களை சுகா­தார அமைச்­சுக்கு உட­ன­டி­யா­கத் தெரி­விக்க வேண்­டும்.

"அனைத்து மாநில அர­சாங்­கங்­களும் தனி­யார் சுகா­தார வச­தி­களும் மருத்­து­வக் கல்­லூ­ரி­களும் கறுப்பு பூஞ்­சையை நிர்­வ­கிக்­கும், கண்­ட­றி­யும், பரி­சோ­த­னை­யி­டும் வழி­காட்­டி­களை பின்­பற்ற வேண்­டும்," என்று சுகா­தார அமைச்­சின் இணைச் செய­லா­ளர் லாவ் அகர்­வால் எழுதிய கடி­தத்­தில் தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் கறுப்பு பூஞ்சை நோயை பெருந்­தொற்­றாக ராஜஸ்­தான் மாநில அரசு அறி­வித்­துள்­ளது.

ராஜஸ்­தான் தலை­ந­கர் ஜெய்ப்­பூர் எஸ்­எம்­எஸ் மருத்­து­வ­ம­னை­யில் மட்­டும் நூறு பேர் கறுப்பு பூஞ்சை தொற்­றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் 1,500 பேர் கறுப்பு பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­வரை 90 பேர் இந்­தத் தொற்­றுக்கு பலி­யா­கி­விட்­ட­னர்.

ஹரி­யா­னா­வில் 115 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு கண்­ட­றியப் ­பட்­டுள்ளதாக அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் தெரி­வித்­தார்.

கறுப்பு பூஞ்சை பாதிப்­புக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக மாநி­லம் முழு­வ­தும் உள்ள மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­களில் தனி­யாக 20 சிறப்புப் படுக்­கை­கள் கொண்ட வார்­டு­கள் அமைக்­கப்­பட்டிருப்­ப­தா­க அவர் கூறினார்.

ெதலுங்­கானா, தமி­ழ­கத்­திலும் கறுப்பு பூஞ்சை அடி­யெ­டுத்து வைத்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் மட்­டும் ஒன்­பது பேர் இந்தத் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

கறுப்பு பூஞ்­சை­யால் முகம், மூக்கு, கண்­கள் பாதிக்­கப்­பட்டு நுரை­யீ­ர­லுக்­கும் பர­வும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­து உள்­ள­னர்.

இதற்­கி­டையே இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றம், வீட்­டி­லேயே சுய­மாக கொவிட்-19 பரி­சோ­தனை செய்து கொள்­ளும் சாத­னத்­துக்கு ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது.

'மைலேப்' நிறு­வ­னத்­தின் 'கொவி­செல்ஃப்' எனும் அந்­தச் சாத­னம் மூலம் 15 நிமி­டங்­களில் பரி சோதனையின் முடிவு தெரி­யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.