சாங்கி விமான நிலையத்தில் மேலும் 43 ஊழியர்கள் பாதிப்பு தெற்கு ஆசிய குடும்பத்துக்கு உதவிய ஊழியரிடமிருந்து தொற்று பரவியிருக்கலாம்

சாங்கி விமான நிலையத்தில் மேலும் 43 ஊழியர்கள் பாதிப்பு தெற்கு ஆசிய குடும்பத்துக்கு உதவிய ஊழியரிடமிருந்து தொற்று பரவியிருக்கலாம்

4 mins read

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சிறப்பு சோதனை நட­வ­டிக்­கை­யில் மேலும் 10 சாங்கி விமான நிலைய ஊழி­யர்­க­ளுக்­குத் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சாங்கி விமான நிலை­யத்­தில் கொவிட்-19 தொற்று குழு­மம் உரு­வா­ன­தைத் தொடர்ந்து அங்கு பணி­பு­ரி­யும் கிட்­டத்­தட்ட 19,000 பேருக்கு கொரோனா கிருமி பரிசோதனை செய்­யப்­பட்­டது.

இந்த 10 பேரு­டன் சேர்த்து மொத்­தம் 43 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது என்று சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் (சிஏ­ஏ­எஸ்) சாங்கி விமான நிலை­யக் குழு­ம­மும் (சிஏஜி) நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

ஏனைய 33 பேருக்­கும் வேறு சோத­னை­க­ளின் போது தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது. அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­போதோ அல்­லது வழக்­க­மான கொரோனா பரிசோத­னை­யின்­போதோ தொற்று உறு­தி­யா­னது.

சாங்கி விமான நிலைய கிரு­மித்­தொற்று குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தைத் தொடர்ந்து விமான நிலை­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்த அறி­விப்­பில் இந்­தப் புள்ளி­ வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

சாங்கி விமான நிலை­யத் தொற்­றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நேற்­றைய கணக்கு 100 ஆக இருந்தது. தற்­போது ஆகப் பெரிய தொற்­றுக்­கு­ழு­ம­மாக இது உள்­ளது.

தொற்று உறு­திப்­ப­டுத்தப் பட்டுள்ள முதல் கட்ட ஊழி­யர்­கள் பி1617 உரு­மாற்­றக் கிரு­மி­யா­லும் அதை ஒத்த கிரு­மி­யா­லும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் பரிசோதனை முடி­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இது, இந்­தத் தொற்­று­க­ளின் மூலம் பொது­வான ஒன்­றாக இருக்­க­லாம் என்­ப­தைக் காட்­டு­கிறது என்று சிஏ­ஏ­எஸ், சிஏஜி இரண்­டும் கூறின.

"சென்ற 29ஆம் தேதி ஏப்­ரல் 2021 அன்று தெற்­கா­சி­யா­வி­ல் இருந்து வந்த ஒரு குடும்­பத்­திற்கு உதவி செய்த ஒரு விமான நிலைய ஊழி­யர் மூல­மாக ஆரம்ப கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என முதற்­கட்ட விசா­ர­ணை­ தெரி­விக்­கிறது. வரு­கை­யின்­போது நடத்­தப்­பட்ட சோத­னை­கள் மூலம் அந்­தக் குடும்­பத்­திற்கு தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது," என்று அவை இரண்­டும் கூறின.

அந்­தக் குடும்­பம் எந்த நாட்­டி­லி­ருந்து வந்­தது என்­பதை அவை குறிப்­பி­ட­வில்லை.

மேல் விசா­ர­ணை­ நடைபெற்று வரு­கிறது.

முதல் முறை நடத்­தப்­பட்ட சோத­னை­யில் தொற்று காணப்­ப­டாத முனை­யம் 3 கீழ்­த்த­ளம் 2ஐ சுற்றி பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளுக்கு கூடு­தல் கொவிட்-19 பரிசோதனை செய்­யப்­ப­டு­கிறது.

மேலும், அதிக பாதிப்­புள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் வரு­கை­யின்­போது, வழக்­க­மான பல்­ப­டிய தொடர்­வினை (பிசி­ஆர்) சோத­னை­யு­டன் ஆன்­டி­ஜன் விரைவு சோத­னை­யும் (ஏஆர்டி) செய்ய வேண்­டும்.

"பிசி­ஆர் சோத­னை­யை­விட ஏஆர்டி சோத­னை­யில் முடி­வு­கள் விரை­வா­கத் தெரி­வ­தால், தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொது சுகா­தார நட­வ­டிக்­கை­களை விரை­வாக மேற்­கொள்ள முடி­யும்.

"நாளை, மே 23ஆம் தேதி முதல் அதிக ஆபத்­துள்ள பணி­களை மேற்­கொள்­ளும் விமான நிலைய ஊழி­யர்­கள் வழக்­க­மாக ஏழு நாட்­க­ளுக்கு ஒருமுறை மேற்­கொள்­ளும் கிருமி பரிசோத­னை­யில் கூடு­தலாக ஏஆர்டி பரிசோத­னை­யும் செய்ய வேண்­டும்," என்று சிஏ­ஏ­எஸ், சிஏஜி ஆகி­யவை கூறின.

இதற்­கி­டையே, சாங்கி விமான நிலை­யம், ஜுவல் ஆகி­ய­வற்­றின் முனை­யங்­கள் ஜூன் 13ஆம் தேதி வரை­ பொது மக்­க­ளுக்கு மூடப்­பட்­டி­ருக்­கும்.

புதிதாக 40 பேருக்குத் தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்று 40 பேருக்­குப் புதி­தாக கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் 30 பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சமூ­கத்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டோ­ரில் எண்மர் கொவிட்-19 நோயா­ளி­யு­டன் தொடர்பு இல்­லா­த­வர்­கள். இதர 22 பேரும் ஏற்­கெனவே தொற்று இருந்­தோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள். இவர்­களில் 16 பேர் முன்பே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள்.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த 10 பேருக்­குத் தொற்று இருப்­பது உறு­தி­யா­னதை அடுத்து அவர்­க­ளுக்­குத் தனிமை உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இங்கு வந்­த­வர்­களில் எட்டு பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள். வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­களில் நேற்று புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றி­ய­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை இப்­போது 61,770 ஆக அதி­க­ரித்து உள்­ளது. மர­ண­ம­டைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 32 ஆகி உள்­ளது.

அண்­மைய சில நாட்­களில் கொவிட்-19 கார­ண­மாக மர­ண­ம­டைந்த இரண்டு பேரில் 70 வயது சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர். இவர் கடந்த வியா­ழக்­கி­ழமை மர­ண­ம­டைந்­தார்.

மற்­றொ­ரு­வ­ரான 88 வயது சிங்­கப்­பூர் மாது மே 1ஆம் தேதி மாண்­டார். இந்த இரு­வ­ரும் புற்று நோய், உயர் ரத்த அழுத்­தம், வாதம் போன்ற நோய்­க­ளால் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­ட­வர்­கள்.

இத­னி­டையே, வியா­ழக்­கி­ழமை சமூ­கத்­தில் புதி­தாக 27 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

அவர்­களில் சிங்­கப்­பூர் பல­துறை தொழிற்­கல்­லூரி மாண­வர், ஒரு கைதி, பொங்­கோ­லில் இருக்­கும் ஈட்­டர்ன் மெடிக்­கல் கிளி­னிக் என்ற மருந்­த­கத்­தைச் சேர்ந்த உத­வி­யா­ளர் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர். அவர்­களில் 15 பேர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள்.

ஆறு பேருக்­குத் தொடர்பு இல்­லா­மல் தொற்று ஏற்­பட்டு இருந்­தது தெரி­ய­வந்­தது. 17 பேர் முந்­தைய தொற்­றுக் குழு­மங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

வியா­ழக்­கி­ழமை மொத்­தம் 41 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. அவர்­களில் 14 பேர் ஏற்­கெ­னவே தனிமை உத்­த­ர­வில் இருந்­த­வர்­கள். மருத்­து­வ­ம­னை­யில் 240 பேர் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். தீவிர கண்­கா­ணிப்­பில் நான்கு பேர் கவ­னிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.