சிங்கப்பூர்-இந்தியா: அன்றாடம் 25 பேர் வருகை; 180 பேர் புறப்பாடு

சிங்கப்பூர்-இந்தியா: அன்றாடம் 25 பேர் வருகை; 180 பேர் புறப்பாடு

2 mins read

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் இப்போது 'வந்தே பாரத்' பயணிகள் விமானச் சேவை மட்டும்தான் நடந்து வருகிறது.

அந்த விமா­னங்­களில் சராசரி யாக நாள் ஒன்­றுக்கு ஏறத்­தாழ 180 பேர் சிங்­கப்­பூ­ரிலிருந்து இந்தி­யா­வுக்குத் திரும்பிச் செல்­கி­றார்­கள். இந்­தி­யா­வில் இருந்து ஏறத்­தாழ 25 பேர் சிங்­கப்­பூர் வரு­கி­றார்­கள். இங்கு வரு­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் நாடு திரும்­பும் சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளாக அல்­லது நிரந்­த­ர­வா­சி­க­ளாக இருக்­கி­றார்­கள்.

போக்­கு­வ­ரத்து அமைச்­சும் வெளி­யு­றவு அமைச்­சும் மனி­த­வள அமைச்­சும் ஊட­கக் கேள்­வி­க­ளுக்கு கூட்­ட­றிக்கை மூலம் நேற்று அளித்த பதிலில் இதனைத் தெரி­வித்தன.

இந்­தியா 2020 மார்ச் முதல் தன் நாட்­டில் இருந்து அனைத்­து­லக விமா­னங்­கள் புறப்­பட்­டுச் செல்­ல­வும் தரை­யி­றங்­க­வும் தடைவிதித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வனம் இந்­தி­யா­விற்குச் சரக்கு விமா­னச் சேவையை மட்­டுமே இப்போது நடத்த முடி­யும். வெளி­நா­டு­களில் உள்ள குடி­மக்­களைத் தன் நாட்டிற்குக் கொண்டு வரு­வ­தற்­காக இந்­திய அர­சாங்­கம் வந்தே பாரத் சேவையை நடத்தி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கு இப்­போதுள்ள பய­ணி­கள் விமா­னச் சேவை இது மட்­டும்­தான் என்­ப­தால் இங்கு திரும்ப விரும்­பு­வோர் இந்த விமா­னத்­தில் புறப்­பட்­டு வர இந்­திய அர­சாங்கம் அனு­ம­திக்­கிறது.

இந்­தச் சேவையை இந்­திய அரசு நிய­மிக்­கும் இந்­திய நிறு­வ­னங்­கள் மட்­டுமே சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் அனு­ம­தி­யு­டன் நடத்­து­கின்­றன.

இப்­போது இத்­த­கைய பய­ணி­விமா­னச் சேவை­கள் எல்­லாம் சாங்கி விமான நிலை­யம் முனையம் 1ல் செயல்­ப­டு­கின்­றன.

சாங்கி விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கும் அனைத்து பய­ணி­களும் இங்கு வரும்­போது இரண்டு வகை கொவிட்-19 பரி­சோ­த­னை­களுக்கு உட்­பட வேண்­டும்.

தரை­யி­றங்­கி­ய­தும் அதற்கே உரிய வாக­னங்­களில் அவர்­கள் 21 நாட்­கள் தனிமைப்படுத்­திக் கொள்­ள­வேண்­டிய இடத்­திற்குக் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றார்­கள் என்றும் அந்­தக் கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

இந்தியா போன்ற தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களைக் கையாளும் ஊழியர்கள் முழு பாதுகாப்பு உடை சாதனங்களுடன் செயல்படு கிறார்கள்.