விமான நிலைய ஊழியர்கள் 14,000 பேரை மூன்று தனிப் பிரிவுகளாகப் பிரித்து, அதிக அபாயமுடைய பகுதியில் பணிபுரியும் 4,400 ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு ஏற்
படாமல் பாதுகாப்பதுடன் அவர்களை மற்ற ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து தனிமைப்படுத்த உள்ளது சாங்கி விமான நிலையக் குழுமம்.
கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், அதிக அபாயமுள்ள பகுதியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏழு நாள்களுக்கு ஒரு முறை பிசிஆர் பரிசோதனை மற்றும் மூன்றாவது நாளில் ரேப்பிட் ஆண்டிஜென் பரிசோதனை செய்வது, இளம், ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களை மட்டும் அந்தப் பகுதியில் பணியில் அமர்த்துவது, உரிய தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை அவர்கள் எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதை உறுதிப்படுத்துவது போன்ற கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன.
அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முனையங்கள் 1, 3 வழியாகச் செல்லாமல், முனையம் 2ல் தூரமாக உள்ள வாயில்களுக்கு பாதுகாப்புத் துணையுடன் அழைத்துச் செல்லப்படுவர். அங்கிருந்து பயணிகள் அவர்களது தனிமைப்
படுத்தல் இடங்களுக்கு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்படுவர் என நேற்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
இரண்டாம் முனையத்தில் தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் அங்கு பயணிகளுக்கு குடிநுழைவு அனுமதி தொடர்பான பணிகள் நடை
பெறுவதில்லை.
இந்த நடவடிக்கைகள் படிப்
படியாக அறிமுகபப்டுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் ஜூன் 13ல் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து
விடப்படும்போது சாங்கி 1, 3 முனையங்களிலும் ஜுவல் சாங்கியிலும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
விமான நிலையத்தின் நடைமுறைச் செயல்பாடுகளின் அடிப்படை மறுவடிவமைப்பு இது என சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாகி லீ சியோ ஹியாங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுடன் ஏற்படும் குறுகியகாலத் தொடர்பும் அபாயகரமானது எனும் அனுமானத்தின் அடிப்படையில் தற்போது இந்த நடைமுறைகள் எடுக்கப்படுகிறது எனஅவர் குறிப்பிட்டார்.
சாங்கி விமான நிலைய கிருமித்தொற்று குழுமத்தில் இந்த மாதம் 100க்கும் அதிகமானோருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாலும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெகுவாகப் பரவும் B1617 உருமாறிய கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நீண்டநேர நடவடிக்கைகள் முன்பு அபாயகரமானவையாகக் கருதப்பட்டாலும் தற்போது பயணிகளுடனான ஊழியர்களின் எந்தத் தொடர்பும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது.
விமானநிலைய கிருமித்தொற்றுக் குழுமம் தொடர்பில் விசாராணையும் பகுப்பாய்வும் மேற்கொண்டதை அடுத்து சாங்கி விமான நிலையக் குழுமம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விமான நிலையத்தில் பொதுமக்கள் கூடும் பகுதிகள் குறைந்த அபாயமுடைய 'ஸோன் 3' பகுதி எனக் கருதப்படும்.
புறப்பாடு குடிநுழைவுப் பகுதி, மத்திய இடைமாற்றுப் பகுதி போன்றவை அடுத்த கூடுதல் அபாயமுள்ள 'ஸோன் 2' பகுதியாக வகைப்படுத்தப்படும்.
பயணிகள் புறப்பாடு, வருகை வாயில்கள், வருகை குடிநுழைவு கூடம், பயணப் பெட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் கூடங்கள் போன்றவை ஆக அதிக அபாயமுள்ள 'ஸோன் 1' பகுதியாக இருக்கும். அதில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களது வேலை நேரத்தில் மற்ற பகுதிகளுக்குச் செல்லவோ, அங்கு ஊழியர்களுடன் கலந்துறவாடவோ முடியாது. அவர்கள் முகக்கவசம், கையுறைகள், அறுவை சிகிச்சை உடை போன்றவற்றை எப்போதும் அணிந்திருப்பர். மற்ற பகுதி ஊழியர்களுக்கு 14 நாள்களுக்கு ஒருமுறை பிசிஆர் பரிசோதனையும் ஏழாவது நாளில் ரேப்பிட் ஆன்டிஜன் பரிசோதனையும் செய்யப்படும். கொரோனா தொற்று இருக்கும் வரை புதிய நடைமுறைகள் செயல்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

