200,000க்கும் கீழ் பதிவு

200,000க்கும் கீழ் பதிவு

2 mins read

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம்

கொவிட்-19 இரண்­டா­வது அலை இந்­தி­யா­வில் கடும் பாதிப்பை ஏற்­ப­டுத்தி வந்த நிலை­யில், இப்­போது அதன் தாக்­கம் சீரா­கக் குறை­யத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த ஏப்­ரல் 14ஆம் தேதிக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக அங்கு ஒரு­நாள் பாதிப்பு இரு­நூ­றா­யி­ரத்­திற்­கும் குறை­வா­கப் பதி­வாகி இருக்­கிறது.

அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட தர­வு­க­ளின்­படி, கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக அங்கு 196,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 3,511 பேர் கிருமித்தொற்­றால் மாண்­டு­விட்­ட­னர். இதை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த பாதிப்பு 26,948,874 ஆக­வும் உயி­ரி­ழப்பு 307,231 ஆக­வும் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த பல நாள்­க­ளாக, நாள்­தோ­றும் கொரோ­னா தொற்றால் இறந்­தோர் எண்­ணிக்கை 4,000 என்ற எண்­ணிக்­கையை ஒட்­டியே இருந்­தது அர­சாங்­கத்­திற்­கும் நிபு­ணர்­க­ளுக்­கும் கவலை அளிப்­ப­தாக இருந்து வந்­தது.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வல் அதி­க­மாக இருந்த மகா­ராஷ்­டிரா, டெல்லி, உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­களில் புதிய பாதிப்பு குறைந்து வரு­கிறது. இது, இந்­தி­யா­வில் கொரோனா 2வது அலை­யின் தாக்­கம் தணி­யத் தொடங்­கி­விட்­ட­தைக் காட்­டு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

கொரோனா பர­வ­லைத் தடுக்­கும் வித­மாக பல மாநி­லங்­களும் கட்­டுப்­பா­டு­களை நீட்­டித்திருக்கின்றன. தமிழ்­நாடு, ஆந்­திரா, கேரளா, கர்­நா­டகா, தெலுங்­கானா, உத்­த­ரப் பிர­தே­சம், நாக­லாந்து, மிசோ­ரம், மேகா­லயா, அரு­ணாச்­ச­லப் பிர­தே­சம், ஜம்மு-காஷ்­மீர், கோவா ஆகிய மாநி­லங்­கள் கிட்­டத்­தட்ட முழு ஊர­டங்கு போன்ற கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் நடை­மு­றைப்­ப­டுத்தியுள்­ளன.

தொடர்ந்து பதி­னொன்­றாம் நாளாக, புதி­தாக கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் அதி­லி­ருந்து மீண்­டோர் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்­ஷ­வர்­தன் குறிப்­பிட்­டார்.

அதிக தக­வல் கோரும் உலக நிறு­வ­னம்

இத­னி­டையே, இந்­தி­யா­வின் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் தயா­ரிக்­கும் கொவேக்­சின் தடுப்பு மருந்தை 'அவ­ச­ர­கால கொரோனா தடுப்பு மருந்­துப் பட்­டி­ய­லில்' சேர்க்க கூடு­தல் தக­வல் தேவைப்­ப­டு­வதாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்துள்ளது.

இந்­நி­லை­யில், அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டில் இடம்­பெ­று­வ­தற்­குத் தேவை­யான 90% ஆவ­ணங்­களை உலக சுகா­தார நிறு­வ­னத்­தி­டம் ஏற்­கெ­னவே தாக்­கல் செய்­து­விட்­ட­தாக ஹைத­ரா­பாத் நகரை மைய­மா­கக் கொண்ட பாரத் பயோ­டெக் நிறு­வ­னம், இந்­திய அர­சாங்­கத்­திற்குத் தகவல் அனுப்பியுள்ளது.

உலக சுகா­தார நிறு­வ­னப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றா­த­தால், வெளி­நா­டு­கள் எல்­லை­க­ளைத் திறக்­கும்­போது கொவேக்­சின் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட இந்­தி­யர்­கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.