சமூகப் பராமரிப்பு இடங்கள் 2,400 படுக்கைகளுடன் தயார்

சமூகப் பராமரிப்பு இடங்கள் 2,400 படுக்கைகளுடன் தயார்

1 mins read

அண்­மைய வாரங்­க­ளாக சமூ­கத்­தில் கொவிட்-19 பர­வல் அதி­க­ரித்­துள்­ளதை அடுத்து, கொரோனா நோயா­ளி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்தி, கவ­னித்­துக்­கொள்­வ­தற்­காக சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­களில் படுக்­கை­கள் தயார்ப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

அத்­த­கைய மூன்று இடங்­களில் இப்­போ­தைக்கு 2,400 நோயா­ளி­க­ளைத் தங்க வைக்க முடி­யும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

டி'ரிசார்ட் என்­டி­யுசி, துவாஸ் சௌத், பிரைட் விஷன் மருத்­து­வ­மனை ஆகி­ய­வையே அம்­மூன்று சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­கள். கிரு­மித்­தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்ட, அதே வேளை­யில் இலே­சான அறி­கு­றி­களும் குறைந்த அபா­ய­மும் இருப்­போர் அந்த இடங்­களில் தங்க வைக்­கப்­படு­வர்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, 268 பேர் அவ்­வி­டங்­களில் தங்க வைக்­கப்­பட்டு, கவ­னித்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர். அதா­வது, அவற்­றின் கொள்­ள­ள­வில் இப்­போது கிட்­டத்­தட்ட 10% நிரம்­பி­யுள்­ளது.

இருப்­பி­னும், சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டக் கொள்­ள­ளவை அதி­க­ரிக்க வேண்­டிய தேவை ஏற்­படும் பட்­சத்­தில், முன்­னெச்­ச­ரிக்­கை­யாக முன்­னாள் அங் மோ கியோ தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம், லோயாங் அர­சாங்க ஊழியர் மனமகிழ் மன்­றம் ஆகிய இடங்­களில் உள்ள சமூ­கப் பரா­மரிப்பு வசிப்­பி­டங்­க­ளை­யும் அர­சாங்­கம் தயார்ப்­படுத்தி வரு­கிறது. அவ்­விரு இடங்­களில் மேலும் 1,700 பேரைத் தங்க வைக்க முடி­யும் என அமைச்சு தெரி­வித்­தது.

தேவைக்­கும் உள்­ளூர் நிலை­மைக்­கும் கொள்­ள­ள­வைக் கூட்­ட­வும் குறைக்­க­வும் ஏது­வாக ஒவ்­வொரு சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­ட­மும் வடி­வ­மைக்­கப்­பட்டு, உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

"உள்­ளூர் நில­வ­ரத்­தை­யும் தேவை­களை­யும் தொடர்ந்து மறு­ஆய்வு செய்து, அதற்­கேற்­ற­படி சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பிடங்­க­ளின் கொள்­ள­ளவு மாற்­றி­ய­மைக்­கப்­படும்," என்று அமைச்சு கூறியுள்ளது.