மலேசியாவில் கிருமித்தொற்று மீண்டும் புதிய உச்சம்; 7,478 பேர் பாதிப்பு

மலேசியாவில் கிருமித்தொற்று மீண்டும் புதிய உச்சம்; 7,478 பேர் பாதிப்பு

1 mins read
1ee30e1d-d345-4ee7-8bff-1e08f97a752a
-

மலேசியாவில் இன்று (மே 26) 7,478 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருமிப் பரவல் தொடங்கியது முதல் மலேசியாவில் ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.

அந்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தொற்று எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.

மலேசியாவில் நேற்று (மே 25) தொற்று எண்ணிக்கை 7,289 என பதிவானதே ஒரே நாளில் அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கை எனக் கருதப்பட்ட நிலையில் இன்று அது மேலும் சற்று அதிகரித்தது.

இந்நிலையில், மலேசியாவில் கிருமித்தொற்று நிலவரம் மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அடுத்த இரு வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

மலேசியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மோசமான நிலவரத்திற்கு மலேசியர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.

மக்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், கொவிட்-19 நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகிருமித்தொற்று