300,000 வீடுகளைச் சேதப்படுத்திய 'யாஸ்' புயல்; மூவர் மரணம்

300,000 வீடுகளைச் சேதப்படுத்திய 'யாஸ்' புயல்; மூவர் மரணம்

1 mins read
2e7b25f6-85bd-446f-af45-3a1027775d8e
மேற்கு வங்க மாநிலம், கிழக்கு மிட்னாப்பூரில் மீட்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள். படம்: என்டிடிவி -

இந்­தி­யா­வின் கிழக்­குப் பகு­தி­யில் நேற்று கரை­யைக் கடந்த 'யாஸ்' புய­லால் மேற்கு வங்­கத்­தில் கிட்­டத்­தட்ட 300,000 வீடு­கள் சேத­ம் அடைந்­து­விட்­ட­தா­க­வும் பத்து மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மாநில முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

மீன் பிடிக்­கச் சென்ற ஒரு­வர் தற்­செ­ய­லாக உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக வும் புய­லால் பாதிக்­கப்­பட்ட பகுதி­க­ளைத் தாம் நாளை பார்­வை­யிட உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

மிகத் தீவிர புய­லான 'யாஸ்', ஒடிசா மாநி­லம், பாலா­சோர் மாவட்­டத்­தில் நேற்று காலை 9 மணி வாக்­கில் கரை­யைக் கடந்­தது. அப்­போது 140-145 கி.மீ. வேகத்­தில் காற்று வீசி­யது. அம்­மா­நி­லத்­தில் மரம் விழுந்து முதி­ய­வர் ஒரு­வ­ரும் இளை­யர் ஒரு­வ­ரும் மாண்­டு­போ­ன­தா­கக் கூறப்­பட்­டது.

கடலில் பெரும் உய­ரத்­திற்கு அலை­கள் எழுந்­த­தால் ஒடி­சா­வில் பல கட­லோர கிரா­மங்­க­ளுக்­குள் கடல்­நீர் புகுந்­தது. மாநி­லத்­தின் பல இடங்­க­ளி­லும் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவானது. இன்று வரை மழை நீடிக்­கும் என இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

மேற்கு வங்­கத்­தி­லும் ஒடி­சா­விலும் ஐந்து விமான நிலை­யங்­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டன; விமான சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன. முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­யாக கிட்­டத்­தட்ட இரண்டு மில்­லி­யன் பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.