பிரதமர் முகைதீனுக்கு மீண்டும் நெருக்குதல்

பிரதமர் முகைதீனுக்கு மீண்டும் நெருக்குதல்

2 mins read
55887aa4-2399-4ce5-9f5c-adc9e571360b
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இஸ்லாமிய விவகாரத் துறைஅதிகாரிகள், பாதுகாப்பு உடையணிந்து நேற்று அதிகாலை கொட்டும் மழையில்கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியானவரின் நல்லுடலை, அங்குள்ள ஹாஜிசையது இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றனர். படம்: பெர்னாமா -

கொவிட்-19 தொடர்பில் மக்களிடையே கொந்தளிப்பு; நாடாளுமன்றம் மீண்டும் கூட அறைகூவல்

கொவிட்-19 கொள்­ளை­நோ­யைக் கையாள்­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­ப­தற்­காக மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின், இவ்­வாண்டு ஜன­வரி மாதம் அவ­ச­ர­நி­லையை அறி­வித்­தார். அதன்­படி, நாடா­ளு­மன்­றம் கூடு­வது நிறுத்­தி­வைக்­கப்­பட்­டது. இருப்­பி­னும், கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை­யில், அவர் மக்­க­ளின் அதி­ருப்­திக்கு ஆளா­கி­யுள்­ளார்.

கடந்த மூன்று நாட்­க­ளாக பதி­வா­கும் கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை, புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது. ஜன­வ­ரி­யில் தின­மும் பதி­வான தொற்று எண்­ணிக்­கை­யை­விட இப்­போது இரு­ம­டங்­கா­கி­விட்­டது. கொவிட்-19 தீவிர சிகிச்­சைப் பிரி­வுப் படுக்­கை­கள் முழு­தும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், நாட்­டி­லுள்ள சில பெரிய மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு நெருக்­கடி நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மக்­க­ளுக்­கான தடுப்­பூ­சிப் பணி­களும் மும்­மு­ர­மாக நடை­பெ­று­வ­தா­கத் தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்­தின் மீதுள்ள நம்­பிக்­கையை மக்­கள் இழந்­து­விட்­ட­னர் என்­ப­தற்கு மலே­சி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தயங்­கு­வது ஓர் அறி­குறி என்­றார் நாடா­ளு­மன்ற துணை சபா­நா­ய­க­ரும் அம்னோ கட்சி உறுப்­பி­ன­ரு­மான திரு­வாட்டி அஸ­லினா ஒத்­மான் சையது.

பொது­மக்­க­ளின் அவ­நம்­பிக்­கையை நாடா­ளு­மன்ற பொது விவா­தங்­கள் மூலம் கையாள வேண்­டும் என்று நேற்று அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார்.

"கொவிட்-19 பல ஆண்டு காலம் நீடிக்­கும் சாத்­தி­யம் உண்டு. அப்­ப­டி­யென்­றால் நாம் நிரந்­த­ர­மாக அவ­ச­ர­நி­லை­யில் இருக்க முடி­யாது. நெருக்­கடி காலங்­களில் நாடாளு­மன்­றம் கூடு­வ­தைத் தவிர்க்­கும் ஒரே நாடாக நாம் இருக்க வேண்­டுமா?" என்று அவர் வின­வி­னார்.

மோச­ம­டைந்து வரும் கொள்­ளை­நோய் தொடர்­பி­லான அர­சாங்­கத்­தின் அணு­கு­முறை, கிரு­மித்­தொற்று தொடர்­பான விதி­மு­றை­களை அமல்­ப­டுத்­து­வ­தில் பார­பட்­சம் ஆகி­ய­வற்­றால் அர­சாங்­கம் வெகு­வாக விமர்­சிக்­கப்­படும் நிலை­யில், அந்­நாட்டு உள்­ளூர் சமூக ஊட­கங்­களில் கடந்த சில மாதங்­க­ளா­கவே மக்­கள் தங்­க­ளின் குமு­ற­லைக் கொட்டி வரு­கின்­ற­னர்.

நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­ய­வாறு கொவிட்-19 தொற்றை எதிர்­கொள்ள அர­சாங்­கத்­தின் முயற்­சி­க­ளுக்கு மக்­கள் ஆத­ர­வ­ளித்­தாலே தமக்கு மகிழ்ச்சி என்று பிர­த­மர் முகை­தீன் பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டி­ருந்­தார். அதற்­காக தம்மை அவர்­கள் 'அறி­வற்ற பிர­த­மர்' என்று அழைத்­தா­லும் பர­வா­யில்லை என அவர் கூறி­ய­து­டன் முழு ஊர­டங்கு மீண்­டும் பிறப்­பிக்­கப்­ப­டாது என்­றும் சொல்­லி­விட்­டார்.

"பொதுத் தேர்­தல் நடை­பெற வேண்­டி­ய­தில்லை. அதற்­குப் பதி­லாக அவ­ச­ர­கால அமைச்­ச­ரவை கொண்ட ஓர் இடைக்­கால அவ­ச­ர­நிலை அர­சாங்­கம் அமைக்­கப்­ப­ட­லாம். அதில் அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­களும் இடம்­பெ­ற­லாம்," என்று திரு­வாட்டி அஸ­லினா கூறிய ஆலோ­ச­னை­களை எதிர்க்­கட்­சித் தலை­வர்­களும் வர­வேற்­றுள்­ள­னர்.

நாட்­டுக்­காக ஒரு­மித்த கருத்தை நாடு­வ­தற்கு நாடா­ளு­மன்­றமே கள­மாக இருக்க வேண்­டும் என்று செனட்­டர் லியூ சின் டோங் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.