மலேசியாவில் கிருமித்தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம்

2 mins read

மலே­சி­யா­வில் பதி­வா­கும் புதிய கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து ஏறு­மு­க­மாக உள்ள நிலை­யில், நேற்று அங்கு 7,857 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­தி­செய்­யப்­பட்­டன.

மூன்­றா­வது நாளாக மலே­சி­யா­வில் இவ்­வாறு 7,000க்கும் மேற்­பட்ட கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­தி­யா­கி­யுள்­ளன. நேற்று முன்­தி­னம் 7,478 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­தி­யா­கின.

நேற்­றைய எண்­ணிக்­கை­யு­டன் மலே­சி­யா­வின் மொத்த கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை தற்­போது 541,224ஐ எட்­டி­யுள்­ள­தாக சுகா­தார தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார்.

சிலாங்­கூர் மாநி­லத்­தில் பதி­வான 2,675 தொற்­றுச் சம்­ப­வங்­களே ஆக அதி­கம். அதற்கு அடுத்த நிலை­யில் சர­வாக் மாநிலத்­தில் 772 சம்­ப­வங்­களும் கிளந்­தான் மாநி­லத்­தில் 754 சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

கோலா­லம்­பூர், ஜோகூர் பாரு ஆகி­ய­வற்­றில் 500க்கும் மேற்­பட்ட கொவிட்-19 சம்­ப­வங்­கள் கண்­டறியப்­பட்­டன.

முழு ஊர­டங்கைப் பரி­சீ­லிக்கவும்

இதற்­கி­டையே நாளுக்கு நாள் புதிய உச்­சத்­தைத் தொட்டு வரும் மலே­சி­யா­வின் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் குறித்து ஜோகூர் மன்­னர் இப்­ரா­ஹிம் இஸ்­கந்­தர், மலே­சிய அர­சாங்­கம் 'முழு ஊர­டங்கு' நிலை­யைப் பரி­சீ­லிக்க வேண்­டும் என்று கோரி­யுள்­ளார்.

எட்டு நாட்கள் தொடர்ச்சியாக 6,000க்கும் மேலான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் மலே­சி­யா­வில் தின­மும் பதி­வாகி வரு­கின்ற நிலை­யில், புதன்­கி­ழ­மை­யன்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் அவர் இவ்­வாறு அறி­வு­றுத்தி இருந்­தார்.

மலே­சி­யர்­கள் கட்­டுப்­பாட்­டு­டன் இருந்து தாங்­களே வீட்­டில் முடங்கி­ இ­ருக்­கும் பழக்­கத்­தைக் கடைப்­பிடிக்க வேண்­டும், அல்­லது தங்­களையே அறி­யா­மல் தொற்­றுக்கு ஆளா­கக்­கூ­டும் என்று அவர் விவரித்­தார்.

"முடக்­க­நி­லைக்­குத் தயா­ரா­கும் நிலைப்­பாடு சமூ­கத்­தின் அனைத்து நிலை­க­ளி­லும் இருக்க வேண்­டும். நம் அனை­வ­ருக்­கும் மிக மோச­மான விளை­வு­கள் ஏற்­ப­டு­வதை அது தடுக்­கும். கொவிட்-19 எண்­ணிக்கை குறை­வ­தாக இல்­லை­ என்­றால் அர­சாங்­க­மும் முழு ஊர­டங்கு குறித்து பரி­சீ­லிக்க வேண்­டும்," என்று குறிப்­பிட்­டார் மன்­னர் இப்­ரா­ஹிம்.

கொள்­ளை­நோய் பர­வு­வ­தைத் தடுக்­கும் நோக்­கில் மலே­சிய அர­சாங்­கம் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை ஜூன் 7 வரை பிறப்­பித்­துள்­ளது. இருப்­பி­னும் பொரு­ளி­யல் சார்ந்த பிரி­வு­கள் தொடர்ந்து இயங்கி வரு­வ­தால் சிலர் தங்­களின் அதி­ருப்­தி­யைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­களின் பாரத்­தைக் குறைக்­க­வும்

முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், குறிப்­பாக மருத்­துவ ஊழி­யர்­க­ளின் நலன் கருதி சமூ­கத்­தினர் அனை­வ­ரும் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் உறு­தி­யு­டன் இருக்க வேண்­டும் என்று தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார் மன்­னர்.

"அவர்­கள் களைத்து, சோர்ந்து போய் இருப்­பதை நம்­மால் காண முடி­கிறது. ஆனா­லும், தங்­க­ளின் கட­மை­யி­லி­ருந்து அவர்­கள் தவ­ற­வில்லை. அவர்­கள் கொவிட்-19 நோயு­டன் மட்­டும் போரா­ட­வில்லை என்­பதை நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள்," என்­றார் மன்­னர் இப்­ரா­ஹிம்.

உரு­மா­றிய கிரு­மி­கள் நாட்­டில் தென்­ப­டு­வது அச்­சத்தை அளிப்­ப­தாக தெரி­வித்த அவர், இவ்­வாறு தின­மும் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துக்­கொண்டே போனால் மேலும் வேறு உரு­மா­றிய கிரு­மி­கள் வரக்­கூ­டும் என்று பகிர்ந்­து­கொண்­டார்.

அனை­வ­ருக்­கும் பலன் கிட்ட வேண்­டு­மா­னால் அவ­ர­வர் தங்­களின் பங்கை ஆற்றி, தொற்­றுப் பர­வலை நிறுத்த வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.