பாதிக்கப்படுவோருக்கு உதவ $800 மி. ஆதரவுத் திட்டம்

பாதிக்கப்படுவோருக்கு உதவ $800 மி. ஆதரவுத் திட்டம்

3 mins read
a59314e8-49e2-41fa-b587-a3ee497c4c64
-

சிங்­கப்­பூ­ரில் கடு­மை­யாக்­கப்­பட்ட கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் ஏற்­பட்ட பாதிப்பை சமா­ளிக்க வர்த்­த­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் உத­வும் வகை­யில் $800 மில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டத்தை அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் மேம்­பட்ட சம்­பள மானி­யங்­கள், வாட­கைக் கழிவு உள்­ளிட்­டவை இதில் அடங்­கும்.

இந்த அறி­விப்பை நேற்று வெளி­யிட்ட நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், பாதிக்­கப்­பட்­டுள்ள உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள், நிகழ்­கலை, கலை பயிற்று நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு 50 விழுக்­காடு சம்­பள ஆத­ரவு வழங்­கப்­படும் என்று தெரி­வித்­தார்.

அண்­மை­யில் கடு­மை­யாக்­கப்­பட்ட கொவிட்-19 கட்­டுப்­பா­டு­

க­ளின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கான மேம்­பட்ட ஆத­ர­வுத் திட்­டங்­களை அறி­விக்க நேற்று மெய்­நி­கர் வழி­யாக செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்தித்­த­ போது திரு வோங் இவற்­றைத் தெரி­வித்­தார்.

அதே­போல, செயல்­பா­டு­க­ளைத் தொடர அனு­ம­திக்­கப்­பட்­டா­லும் குறிப்­பி­டத்­தக்க அளவு பாதிக்­கப்­பட்ட துறை­கள் வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் 30 விழுக்­காடு மானி­யங்­க­ளைப் பெறும்.

இதன் மூலம் சில்­லறை வர்த்­த­கங்­கள், தனி­ந­பர் பரா­ம­ரிப்பு சேவை நிலை­யங்­கள், அருங்­காட்­சி­ய­கங்­கள், கலைக்கூடங்கள், வர­லாறு விளக்­கத் தளங்­கள், திரை­ய­ரங்­கு­கள், விளை­யாட்டு உள்­ள­ரங்­கங்­கள் மற்­றும் இதர குடும்ப பொழு­து­போக்கு நிலை­யங்­கள் ஆகி­யன பயன்­பெ­றும்.

இருப்­பி­னும், இந்த மேம்­பட்ட சம்­பள ஆத­ர­வுத் திட்­டத்­திற்கு பேரங்­கா­டி­கள், பல்­பொ­ருள் அங்­கா­டி­கள், இணைய சில்­லறை வர்த்­த­கங்­கள் போன்­றவை தகுதி பெற­மாட்டா.

ஏப்­ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வழங்­கப்­படும் சம்­ப­ளத்­திற்­குப் பொருந்­தக்­கூ­டிய இந்த உத­வித்­தொகை செப்­டம்­பர் மாதம் வழங்­கப்­படும் என நிதி அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

உள்­ளூர் ஊழி­யர்­களை சம்­ப­ள­மில்லா கட்­டாய விடுப்­பில் வைக்­கும் அல்­லது அவர்­களை ஆட்­கு­றைப்பு செய்­யும் முத­லா­ளி­கள், அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்­கான வேலை ஆத­ர­வுத் திட்ட உத­வி­யைப் பெற தகு­தி­பெற மாட்­டார்­கள் என அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மேம்­பட்ட சம்­பள ஆத­ர­வுத் திட்ட உதவி நாடும் இதர வர்த்­த­கங்­கள் அதற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

மே 16 முதல் ஜூன் 13 வரை அறி­விக்­கப்­பட்ட இரண்­டாம் கட்ட, விழிப்­பு­நிலை அதி­க­ரிக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு உதவி வழங்க கடந்­த­கால நிதி­யி­ருப்­பில் இருந்து பணம் எடுக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அது குறிப்­பிட்­டது.

மாறாக, செல­வின மறு­ஒ­துக்­கீட்­டின் மூலம் இந்­தத் திட்­டங்­க­ளுக்கு நிதி அளிக்­கப்­படும்.

சில மேம்­பாட்­டுச் செல­வு­க­ளுக்கு அண்­மை­யில் நிறை­வேற்­றப்­பட்ட Singa எனப்­படும் முக்­கிய உள்­கட்­ட­மைப்பு அர­சாங்­கக் கடன் சட்ட மசோ­தா­வின்­கீழ் நிதி வழங்­கப்­படும் என அமைச்சு கூறி­யது.

அமைச்­சர் வோங் மேலும் கூறு­கை­யில், "தற்­போ­தைய ஒட்­டு­மொத்த நில­வ­ரத்­தைப் பார்க்­கை­யில் கட்­டுப்­பா­டு­களை மேலும் கடு­மை­யாக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டாது," என்­றார். தற்­போது நடப்­பில் உள்ள கட்­டுப்­பா­டுகள் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த உதவி இருப்­ப­தாக அவர் சொன்­னார்.

இருப்­பி­னும், இது தொடர்­பான மேல்­வி­வ­ரங்­களை கொவிட்-19க்கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு திங்­கட்­கி­ழமை செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அறி­விக்­கும் என்­றார் திரு வோங்.

ஜூன் 13ஆம் தேதிக்­குப் பிறகு கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப்­பட்­டால், இந்த ஆத­ர­வுத் திட்­டங்­களும் அதற்கு ஏற்­றாற்­போல நீட்­டிக்­கப்­பட முடி­யுமா என்­பது குறித்து தமது அமைச்சு பரி­சீ­லிக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு, கொவிட்-19 ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்கு ஐந்து வரவு செல­வுத் திட்­டங்­கள் மூலம் $100 பில்­லி­யன் வரை­யில் ஒதுக்­கப்­பட்­டது. சேமிப்­பி­லி­ருந்து $52 பில்­லி­யன் வரை எடுக்­கப்­பட்­டது.

"கடந்த ஆண்­டு­டன் ஒப்­பிடும் போது இன்­றைய சூழல் மிக­வும் மாறு­பட்­டது. இந்­தச் சூழ­லில் சேமிப்­பி­லி­ருந்து மீண்டும் பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்க வில்லை.

"எனவே, நாட்டின் நிதி சேமிப்­பில் கைவைக்­கா­மல், நமது சொந்த வளங்களைப் பயன்­ப­டுத்தி நிலை­மை­க­ளுக்கு ஏற்ப செயல்­பட நாம் பழ­கிக்­கொள்ள வேண்­டும். இந்த அடிப்­ப­டை­யி­லேயே இந்­தப் புதிய தற்­கா­லிக உத­வித் திட்­டத்­துக்கு நிதியை ஒதுக்க முடிந்­துள்­ளது," என்­று விளக்கினார் திரு வோங்.

சிரமத்தில் இருப்போருக்கு மேம்பட்ட சம்பள மானியம், வாடகைக் கழிவு