சமூகத்தை மையப்படுத்தி சுகாதாரப் பராமரிப்பு சேவை

சமூகத்தை மையப்படுத்தி சுகாதாரப் பராமரிப்பு சேவை

2 mins read

எதிர்காலத் திட்டங்களை பட்டியலிட்ட சுகாதார அமைச்சர் ஓங்

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, மருத்­து­வ­ம­னை­க­ளையே அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ரா­மல் சமூ­கத்­தில் உள்ள நோயா­ளி­களை கவ­னிக்­கும் சமூகத்தை மையப்படுத்தி இருக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

திரு ஓங், சுகா­தார அமைச்­சுக்­குப் பொறுப்பு ஏற்று இரு வாரங்­களே ஆகின்­றன.

இந்த நிலை­யில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் தமது எண்ணங் களை அவர் பகிர்ந்து கொண்டார்.

சுகா­தார அமைச்­சில் நேற்று நடை­பெற்ற மெய்­நி­கர் பயி­ல­ரங்­கில் அமைச்சர் பேசி­னார்.

இந்த நிகழ்ச்­சி­யில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யைச் சேர்ந்த 700க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

2017ஆம் ஆண்­டில் அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது குறிப்­பி­டப்­பட்ட மூன்று அம்­சங்­களை அமைச்சர் விளக்­கி­னார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்கு அப்­பால் ஆரோக்­கி­யத்­தில் அக்­கறை செலுத்­து­வது, தரத்­தி­லி­ருந்து மதிப்புமிக்க நிலைக்கு முக்­கி­யத்­து­வம் தரு­வது, மருத்­து­வ­ம­னைக்கு அப்­பால் சமூ­கத்­தின் மீது கவ­னம் செலுத்­து­வது ஆகி­யன அந்த மூன்று அம்­சங்­கள்.

இதில் கடைசி அம்சத்தை குறிப்பிட்ட திரு ஓங், சிரமமில்லாத, எளிதில் பெறக்கூடிய, குறைவான கட்டணத்தில் வழங்கப்படும் பரா மரிப்பு சேவைகளால் நோயாளிகள் பலனடைவார்கள் என்றார்.

இதற்கு மருத்துவமனைகளின் தீவிரப் பராமரிப்பையும் தாண்டி சமூகத்தை மையமாகக் கொண்ட சிகிச்சை முறைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் நோயாளிகளின் சிறப்புப் பராமரிப்பு அல்லது அவசர நிலை சிகிச்சைகளில் கவனம் செலுத்த முடியும்.

ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் சமூகத்தில் பெரிய அளவில் பங்காற்றலாம்.

தனியார் பொது மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்பின் தொடர்ச்சி யாக இன்றியமையாத பங்கை ஆற்ற முடியும். இதற்கு சமூகத்தில் செயல் பட்டு வரும் பலதுறை மருந்தகங் களை அவர் உதாரணமாக சுட்டிக் காட்டினார்.

தனியார் பொது மருத்துவர்கள் தங்களுடைய மருந்தகங்களையும் தாண்டி நோயாளிகளுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்க வேண்டும் என்றார் அமைச்சர்.

நோயாளிகளையும் அவரது குடும்பத்தையும் புரிந்துகொண்டு நீண்டகால நோய்களை நிர்வகிக்கும் ஒரு கிராம மருத்துவர்போல் செயல் பட வேண்டும்.

மருந்தாளுநர்களும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்துவதை நோயாளிகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்கள் மீண்டும் மருத்துவமனை சிகிச்சைக்கு வருவதை குறைத்து முக்கிய பங்காற்றலாம். பொதுவான நோய்களை கண்டறிந்து நிர்வகிப் பதில் பயிற்சி பெற்ற தாதிகள் தேவையான மருத்துவ பரி சோதனைகளை நடத்தி தகுந்த மருந்துகளை வழங்கி நோயாளி களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்று அமைச்சர் ஓங் சொன்னார்.

அரசாங்கத்தின் சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் வேளையில் அமைச்சர் ஓங் இவ்வாறு பேசியுள்ளார்.

2010ஆம் ஆண்டிலிருந்து இந்தச் செலவு இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இது மும்மடங்காகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010ல் $10 பில்லியனாகவும் 2018ல் $21 பில்லியனாகவும் இருந்த சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் 20130ல் $59 பில்லியனை எட்ட விருக்கிறது.