கொவிட்-19 கிருமியைக் கையாள சிங்கப்பூர் பயன்படுத்தும் அணுகுமுறை குறித்து பிரதமர் லீ சியன் லூங், திங்கட்கிழமை (மே 31ஆம் தேதி) பிற்பகல் நான்கு மணிக்கு உரையாற்றுவார்.
இதனை திரு லீ இன்று தமது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். "சிங்கப்பூரில் சமூகத் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலன் அளித்து வருகின்றன. வீட்டிலேயே இருந்து விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்துகொண்டதற்கு எங்களது நன்றி," என்று அவர் கூறினார்.
கட்டங்கட்டமாக வெளிப்படைத்தன்மையை அதிகரித்தவாறு கொவிட்-19 கிருமிப்பரவலை கட்டுக்குள் வைப்பது எப்படி என்பது குறித்து உங்களிடம் நான் பகிர திட்டமிடுகிறேன். தீர்வு: சோதனைகளைச் செய்வது, தொடர்புத் தடங்களைக் கண்டுபிடிப்பது, தடுப்பூசி போடுவது. இவற்றுடன், புதிய வழக்கநிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பகிரப் போவதாக பிரதமர் கூறினார்.

