கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் லீ சியன் லூங் இன்று உரையாற்ற இருக்கிறார்.
பிரதமரின் உரை இன்று மாலை 4 மணிக்கு அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளி
பரப்பப்படும். இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீ நேற்று பதிவிட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாக சமூக அளவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நிலையாக இருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலன் தந்திருப்
பதாக அவர் கூறினார்.
விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பொருளியல் நடவடிக்கை
களைப் படிப்படியாக தொடங்கும் அதே சமயத்தில், கொவிட்-19 கிருமிப் பரவலை எவ்வாறு
கட்டுக்குள் வைத்திருப்பது என்பது பற்றி இன்று பகிர்ந்து
கொள்ளப் போவதாக பிரதமர் லீ தெரிவித்தார்.

