முன்பதிவின்றி தடுப்பூசி: ஆர்வத்துடன் வந்த மூத்தோர்

முன்பதிவின்றி தடுப்பூசி: ஆர்வத்துடன் வந்த மூத்தோர்

2 mins read
333b950b-d5a2-4b6a-a79d-02befb2110fa
முன்பதிவு இல்லாமல் தஞ்சோங் பகார் சமூக மன்றத்திற்கு நேற்று தடுப்பூசி போடுவதற்காக வந்திருந்த முதியவர். படம்: திமத்தி டேவிட் -

கொவிட்-19 தடுப்பூசி மையங்களில் சிறப்பு ஏற்பாடு

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள இனி 60 வய­துக்கு மேற்­பட்­டோருக்கு முன்­ப­திவு தேவைப்­படாது என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று முன்­தி­னம் அறி­வித்­ததை அடுத்து நேற்று காலை முதல் தடுப்­பூசி மையங்­களுக்கு முதி­ய­வர்­கள் வந்த வண்­ணம் இருந்­த­னர். இச்­சி­றப்பு ஏற்­பாட்­டின்படி ஏதே­னும் ஒரு தடுப்­பூசி மையத்­திற்­குச் செல்­லும் முதி­ய­வர்­க­ளுக்கு அங்கு உடனே தடுப்­பூசி போடப்­படும்.

நாட்­டில் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் சுமார் 75 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இருப்­பி­னும் எஞ்­சிய 25% அதா­வது கிட்­டத்­தட்ட 280,000 முதி­ய­வர்­கள் இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.

இவர்­கள் இனி முன்­ப­தி­வின்றி தடுப்­பூசி மையத்­திற்­குச் சென்று கொவிட்-19க்கு எதிரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

நட­மா­டு­வ­தில் சிர­மம் அல்­லது தடுப்­பூசி மையத்­திற்­குச் செல்­வ­தில் சிக்­கல் இருக்­கும் நிலை­யி­லும் தடுப்­பூ­சியை வீட்­டுக்கே வந்து போடும் சேவை, இக்­கு­றிப்­பிட்ட வயது பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­படு­வதா­கக் கூறப்­பட்­டது.

தடுப்­பூசி போடும் பணி முதி­ய­வர்­க­ளுக்­காக எளி­தாக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு உடனே தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மாறு அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று அறி­வுறுத்­தி­யி­ருந்­தார்.

முதி­ய­வர்­கள் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய நிலை­யில் இருப்­ப­தால் கொவிட்-19க்கு எதி­ரான பாது­காப்பை அர­சாங்­கம் திட்­ட­மி­டும்­போது அவர்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட அதி­பர் ஹலிமா, பக்­க­வி­ளை­வு­கள் குறித்த அக்­கறை சில­ருக்கு இருப்­ப­தைப் பற்­றி­யும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"தடுப்­பூசி பாது­காப்­பா­னது. ஏற்­கெ­னவே தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 760,000 முதி­ய­வர்­களே அதற்கு மிக வலு­வான ஆதா­ரம்," என்­றார் அவர். தடுப்­பூசி செயல்­முறை தொடர்­பில் மூத்­தோ­ருக்கு உத­வு­மாறு அண்­டை­வீட்­டார், நண்­பர்­கள் ஆகி­யோருக்­கும் அதி­பர் அறி­வு­றுத்தி­னார்.

அடித்­தள அமைப்­பு­கள், சமூ­கச் சேவை அமைப்­பு­கள் ஆகி­யவை இதற்­காக கைகொ­டுக்­க­லாம் என்று குறிப்­பிட்ட அவர், மூத்­தோர் அனை­வ­ரும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வதே தம் விருப்­பம் என்­றார்.