இம்மாதம் 16ஆம் தேதி கட்டுப்
பாடுகள் கடுமையாக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளை 65 கட்டுமான நிறுவனங்கள் மீறியதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில் 26 நிறுவனங்கள் மூன்று நாட்களுக்கு வேலைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டன.
வேலைத்தளத்தில் சேஃப்என்ட்ரி பதிவு செய்துகொள்ளாமல் ஊழியர்களை அல்லது வருகையாளர்களை நுழைய அந்த 26 கட்டுமான நிறுவனங்களும் அனுமதித்ததாகக் கண்டறியப்பட்டது. இரு வேலைத்
தளங்கள் கொவிட்-19 கிருமி தொற்றிய ஊழியர்களை அனுமதித்ததன. இதன் மூலம் ஊழியரணியில் கொவிட்-19 கிருமிப் பரவும் அபாயம் எழுந்ததாக கட்டட, கட்டுமான ஆணையம் கூறியது.
விதிகளைப் பின்பற்றத் தவறிய காரணத்துக்காக இந்த 26 நிறுவனங்களும் அனைத்துவிதமாக நடவடிக்கைகளையும் வேலைத்
தளத்தில் உடனடியாக நிறுத்த மூன்று நாள் தடை உத்தரவை ஆணையம் பிறப்பித்து உள்ளது.
இந்த நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு நிர்வாகத் திட்டங்களை மறுஆய்வு செய்து, இணக்கமற்ற அம்சங்களைக் களைந்து ஆணையத்துக்கு விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக அறிக்கை அளித்த பின்னர் வேலை நிறுத்த ஆணை விலக்கிக்கொள்ளப்படும்.
கொவிட்-19 கிருமி தொற்றிய சம்பவங்கள் கண்டறியப்படும் வேலைத்தளங்கள் முழுமையாக கிருமி நீக்க நடவடிக்கைகளைச் செய்த பின்னர் மீண்டும் வேலை
களைத் தொடங்கலாம் என ஆணையம் தெரிவித்து உள்ளது.
கட்டுமான ஊழியரணியில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் குறைக்கும் பணியில் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பங்கை ஆற்றுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேலைத்தளங்களில் ஆணையம் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் கட்டுமானத் தளங்களில் வேலைகள் எப்போதும்போல நடைபெற வழிவகுக்கும்.
சோதனை செய்யும் இடங்களின் எண்ணிக்கையை ஆணையம் அதிகரித்துள்ளது. கட்டுமானத் தளங்களில் வாரத்திற்கு 900 சோதனைகளை அது மேற்கொண்டு வருகிறது. இது கடந்த ஆண்டைகக் காட்டிலும் மும்மடங்கு அதிகம். 2020 ஜூன் மாதத்தில் வாரத்திற்கு சராசரியாக 300 சோதனைகள் கட்டுமானத்தளங்களில் நடத்தப்பட்டன.
வேலைத்தளங்களின் நுழைவுப் பகுதியில் 'சேஃப்என்ட்ரி' வருகைப் பதிவை உறுதி செய்வது அல்லது 'டிரேஸ்டுகெதர்' மூலம் மட்டுமே சேஃப்என்ட்ரி பதிவை மேற்கொள்வது போன்றவற்றின் மீது அதிக அக்கறை செலுத்தாதது இச்சோதனைகள் வழி கண்டறியப்பட்டதாகவும் இது கவலைக்குரிய அம்சம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
ஊழியர்களையும் வருகையாளர்களையும் கண்காணிக்க பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளை நியமிக்காத கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் எச்சரித்து உள்ளது.
பலதரப்பட்ட கட்டுமானத் தளங்களில் வேலைக்காகவும் சேவைக்காகவும் வந்து செல்லும் துணைக் குத்தகையாளர்கள், விநியோகப் பணியாளர்கள், இதர சேவை வழங்குநர்கள் போன்றோர் பாதுகாப்பு நிர்வாக விதிகமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது அவசியம்.
மேலும் இவர்கள் கட்டுமானத் தளங்களில் ஒருவரோடு மற்றவர் ஒன்றுசேராமல் இருப்பதையும் பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என ஆணையம் தெரிவித்து உள்ளது.
கட்டுமானத்தளத்தில் 'சேஃப்என்ட்ரி' விதிமீறல்