உட்லண்ட்ஸ் டிரைவ் 16 புளோக் 537லுள்ள மின்தூக்கியில் தீச்சம்பவம் நடந்ததில் 20 வயது ஆடவர் உயிரிழந்தார்.
மின்தூக்கியில் அப்போது தனிநபர் நடமாட்டச் சாதனம் இருந்தது.
தீவிபத்து பற்றிய தகவல் வியாழக்கிழமை 11.25 மணிக்கு தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்னதாகவே பொதுமக்கள் தண்ணீர் நிறைந்த வாளிகளைக் கொண்டு தீயை அணைத்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்த இளையர் பிறகு மாண்டதாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.