ஜனநாயகத்திற்காக உயிரைத் துறந்த மாணவர்களுக்கு அஞ்சலி

1 mins read
8277512c-8088-49be-b428-df83eeba10a5
-

தியேனான்மன் சதுக்கத்தில் மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களை சீன அரசாங்கம் சுட்டுக்கொல்ல ஏற்பாடு செய்ததை நினைவுகூறும் வருடாந்திர மிளகுவர்த்தி அஞ்சலி செலுத்த ஹாங்காங்கில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் கைது செய்தனர்.

சீனாவில் இன்னும் எஞ்சியுள்ள ஜனநாயகக் குரலை அடக்கும் விதமாக இந்நடவடிக்கை கருதப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் ஹாங்காங்கின் விக்டோரியா பூங்காவில் திரண்டு இந்த அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். 1989ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதியன்று நடைபெற்ற மாணவர் ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக சீன ராணு அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைச் சுட்டுக்கொன்றனர்.

இந்தச் சம்பவத்தைப் பற்றி கலந்துரையாடும் சுதந்திரம் இன்றும் சீனாவில் இல்லை. இந்தக் கடுமையான போக்கு ஹாங்காங்கில் அண்மைய காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தைக் குறிக்கும் விதமாக "அவமானத்தின் தூண்" என்ற பெயருள்ள மனி முகங்களைக் கொண்ட சிற்பத்தைக் கழுவுவது வழக்கம். இதன் மூலம் ஜனநாயகத்திற்காகவும் தனிமனித சுதந்திரத்திற்காகவும் உயிரைத் துறந்த மாணவர்களின் நினைவைப் பாதுகாக்க விரும்புவதாக மாணவர் சங்கத்தின் தலைவர் சார்ல்ஸ் குவோக் கூறினார்.