பாரந்தூக்கி முறிந்து விழுந்ததால் பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததால் பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

1 mins read
c7731aed-fc47-4b5a-8c9f-907f5a84fa8f
-

பாலஸ்டியர் சாலையில் நேற்று நடையர் மேம்பாலம் ஒன்றின்மீது இடித்த பாரந்தூக்கி முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பாரந்தூக்கி பொருத்தப்பட்டிருந்த அந்த லாரி நேற்றுக் காலை 10.30 மணியளவில் லெவண்டர் ஸ்திரீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது. முறிந்து விழுந்த பாரந்தூக்கி சாலையின் மூன்று தடங்களையும் அடைத்துக்கொண்டது. இதை அடுத்து, பாலஸ்டியர் சாலை மூடப்பட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பவத்தில் ஒருவர் இலேசான காயமுற்றதாகவும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார் என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. காயமடைந்தவர் அந்த லாரியின் ஓட்டுநரா என்பது தெரியவில்லை. ஆயினும், 37 வயதான அவர் கைது செய்யப்பட்டார். பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பாலஸ்டியர் சாலை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்