மலேசியா: நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இலக்கு

1 mins read
026546b8-e5b6-4691-bcc6-63dad00a47e8
நடமாடும் தடுப்பூசி வாகனத்தில் நேற்று கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட கம்போங் முகிபாவாசிகள். படம்: பெர்னாமா -

கோலா­லம்­பூ­ரின் கம்­போங் முகி­பா­வில் நட­மா­டும் தடுப்­பூசி வாகன முன்­னோ­டித் திட்­டத்­தின்­மூ­லம் கிட்­டத்­தட்ட ஆயி­ரம் குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்கு நேற்று கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டது.

மக்­கள் நெருக்­கம் அதி­க­முள்ள இடங்­களில் கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் குறிக்­கோ­ளு­டன் நட­மா­டும் தடுப்­பூசி வாக­னத் திட்­டம் இடம்­பெ­று­வ­தாக அமைச்­சர் அனு­வார் மூசா தெரி­வித்­தார்.

இந்­தத் திட்­டத்­தில் முதி­ய­வர்­க­ளுக்­கும் உடற்­கு­றை­யுள்­ள­வர்­க­ளுக்­கும் முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். இதன்­மூ­லம் கூட்­ட­ர­சுப் பகு­தி­க­ளைச் சேர்ந்த மக்­க­ளுக்கு விரைந்து தடுப்­பூசி போட முடி­யும் என்­றும் அவர் சொன்­னார்.

"இத்­திட்­டத்­திற்கு அனு­மதி பெற்ற பிறகு, இம்­மா­தம் 15ஆம் தேதி­யில் இருந்து பத்து நட­மா­டும் தடுப்­பூசி வாக­னங்­களும் அடுத்த மாதத்­தில் 39 வாக­னங்­களும் இயக்­கப்­படும்," என்­றார் திரு அனு­வார்.

இத்­திட்­டத்­தின் வாயி­லாக, கூட்­ட­ர­சுப் பகு­தி­களில் நாளொன்­றுக்கு 15,000 முதல் 20,000 பேருக்­குத் தடுப்­பூசி போட முடி­யும் என்­றார் அவர்.

இதற்­கி­டையே, பொது இடங்­களில் அதிக உடல்­வெப்­ப­நி­லை­யு­டன் காணப்­ப­டு­வோ­ரைக் கண்­ட­றிய திரெங்­கானு மாநி­ல போலிசார் ஆளில்லா வானூர்­தி­களைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். தரை­யி­லி­ருந்து அதி­க­பட்­சம் 20 மீட்­டர் உய­ரத்­தில் இருந்­த­வாறு உடல்­வெப்­ப­நி­லையை ஆளில்லா வானூர்­தி­கள் கண்­ட­றி­யும் என்று மாநில போலிஸ் தலை­வர் ரொஹைமி முகம்­மது ஈசா கூறினார்.