இலங்கை குடும்பத்தை விடுவிக்க கோரிக்கை; ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி

கிறிஸ்­மஸ் தீவு அக­தி­கள் முகா­மில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிரியா-நடே­சன் தம்­ப­தி­யரை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுத்­துள்­ள­தால் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

தம்­ப­தி­ய­ரின் மூன்று வயது மகள் தரு­ணி­கா­வுக்கு காய்ச்­சல், வாந்தி, மயக்­கம் ஏற்­பட்­ட­தால் கிறிஸ்­மஸ் தீவில் பத்து நாட்­க­ளாக சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு பின்­னர் மேல் சிகிச்­சைக்­காக பெர்த்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவ­ரது உடல்­நிலை சீராக இருப்­ப­தாக வழக்­க­றி­ஞர்­கள் கூறி­யுள்­ள­னர்.

தரு­ணி­கா­வு­டன் அவ­ரது தாயார் பிரியா மட்­டுமே பெர்த்­துக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார். தந்தை நடே­ச­னும் மற்­றொரு மகள் கோபி­கா­வும் கிறிஸ்­மஸ் தீவி­லேயே தங்­கி­யுள்­ள­னர். குழந்­தை­யின் உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டுள்ள சூழ்­நி­லை­யில் தம்­ப­தி­ய­ரின் அக­தி ­களுக்­கான கோரிக்கை இன்னமும் ஏற்­கப்­படாதது மீண்­டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தரு­ணி­கா­வின் பெற்­றோர் இலங்­கை­யி­லிருந்து பத்து ஆண்­டு ­க­ளுக்கு முன்பு புக­லி­டம் தேடி படகு மூலம் ஆஸ்­தி­ரே­லியா வந்­த­னர். குவீன்ஸ்­லாந்­தில் அவர்­கள் தங்­கி­யி­ருந்­த­போது அவர்­க­ளுக்கு தரு­ணி­கா­வும் மூத்த மகள் கோபி­கா­வும் பிறந்­த­னர். கடந்த 2019ல் நாடு கடத்­து­வ­தற்­காக அவர்­கள் விமா­னத்­தில் ஏற்றி அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர். ஆனால் கடைசி நேர நீதி­மன்ற உத்­த­ரவால் விமா­னம் தரை­யி­றக்­கப்­பட்டு அவர்­கள் கிறிஸ் மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

இதற்­கி­டையே பிரியா-நடே­சன் குடும்­பத்தை அமெ­ரிக்கா அல்­லது நியூ­சி­லாந்­தில் குடி­ய­மர்த்­து­வது குறித்து ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது. ஆனால் அவர்­கள் குவீன்ஸ்­லாந்­துக்கே திரும்ப விரும்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!