சிங்கப்பூரில் 550 பேர் டெல்டா கிருமியால் பாதிக்கப்பட்டனர்

சிங்கப்பூரில் 550 பேர் டெல்டா கிருமியால் பாதிக்கப்பட்டனர்

3 mins read

இந்­தி­யா­வில் முதல்­மு­றை­யாக அடை­யா­ளம் காணப்­பட்டு 'டெல்டா' எனப் பெய­ரி­டப்­பட்ட உரு­மா­றிய கிரு­மி­யால் சிங்­கப்­பூ­ரில் இது­வரை 550 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இவர்­களில் 428 பேர் உள்­ளூர்­க் கா­ரர்­கள். 122 பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

டெல்டா கிருமி எளி­தில் மனி­தர் ­க­ளி­டையே பர­வக்­கூ­டி­யது. இத­னால்­தான் இந்­தி­யா­வில் கிரு­மிப் பர­வல் திடீ­ரென அதி­க­ரித்­தது.

இந்த வகை கிருமி, கடந்த அக்­டோ­பர் மாதம் இந்­தி­யா­வில் அடை­யா­ளம் காணப்­பட்­டது.

ஆனால் அண்­மை­யில்­தான் இது, சிங்­கப்­பூ­ரில் பர­வி­யி­ருக்­கும் என நம்­பப் படு­கிறது.

கடந்த மே 4ஆம் தேதி வெளி­யிட்ட அறிக்­கை­யில் சிங்­கப்­பூ­ரில் பத்து பேர் டெல்டா வகை கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி ­வித்­தி­ருந்­தது.

டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் தொற்­றுப்­ப­ர­வ­லுக்­கும் டெல்டா கிரு­மியே கார­ணம் என நம்­பப்­ப­டு­ கிறது.

சிங்­கப்­பூ­ரில் உறுதி செய்­யப்­பட்ட அனைத்து கொவிட்-19 சம்­ப­வங்­களும் தொற்று நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தில் உள்ள தேசிய பொதுச் சுகா­தார சோத­னைச் சாலை­யில் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அப்­போது கிருமியின் மர­பணு வரி­சை­யில் ஏற்­பட்ட மாற்­றத்­தின் மூலம் உரு­மா­றிய கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை நான்கு வகை­யான உரு­மா­றிய கிரு­மி­கள் கண்டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

அவற்­றில் டெல்டா கிரு­மியே அதி­மா­ன­வர்­களை பாதித்­துள்­ள­தாக அமைச்­சின் புள்ளி விவ­ரங்­கள் காட்­டு­கின்­றன. இது, கவ­லை­ய­ளிக்­கும் வகை­யில் மனி­தர்­க­ளி­டையே அதி வேகத்தில் பர­வு­கிறது.

மே 31ஆம் தேதி வரை 449 உள்­ளூர்ச் சம்­ப­வங்­கள், உரு­மா­றிய கிருமி தொடர்­பா­னவை.

இதில் 428 தொற்­றுச் சம்­ப­வங்­கள் டெல்டா கிரு­மி­யால் ஏற்­பட்­டவை.

ஏழு பேர், பிரிட்­ட­னில் முதல் முறை­யாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 'ஆல்ஃபா' உரு­மா­றிய கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­னர். ஒன்­பது பேருக்கு தென் ஆப்­பி­ரிக்­கா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 'பீட்டா' கிரு­மி­யால் தொற்று ஏற்­பட்­டது.

பிரே­சி­லில் முதல் முறை­யாக கண்டு பிடிக்­கப்­பட்ட 'காமா' உரு­மா­றிய கிருமி யால் ஐவர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

உரு­மா­றிய கிரு­மி­க­ளுக்கு ஏற்ப கிருமிப்ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தால் கடந்த இரண்டு வாரங்­க­ளாக தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து உள்­ள­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

"உரு­மா­றிய கிரு­மி­களை முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்­­வ­தற்­காக ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. புதிய தக­வல்­கள் கிடைக்­கும்­போது அதற்கு ஏற்ப தடுப்பு உத்­தி­களும் சரி செய்­யப்­படும். கிரு­மிப்­ப­ர­வ­லைக் கட்­டுக்­குள் வைப்­ப­தற்­காக தொற்­றுக்கு எதி­ரான பரி­சோ­த­னை­கள், தொடர்­பு­க­ளின் தடங்­களை அறி­தல், தடுப்­பூ­சித் திட்­டம் போன்­ற­வற்றை சிங்­கப்­பூர் தீவி­ரப்­ப­டுத்தியுள்­ளது," என்று அவர் தெரி­வித்­தார்.

ஒவ்­வோர் உரு­மா­றிய கிரு­மி­யின் மர­பணு வரிசையும் மாறு­பட்­டி­ருக்­கும். இதை வைத்தே அதி­கா­ரி­களும் அறி­வி­ய­லா­ளர்­களும் உரு­மா­றிய கிரு­மி­யின் அடை­யா­ளத்தை கண்­டு­பி­டிக்கின்­ற­ னர்.

தேசிய பொதுச் சுகா­தார சோத­னைச் சாலை­யின் இயக்­கு­ந­ரான இணைப் பேரா­சி­ரி­யர் ரேமண்ட் லின், மர­பணு வரி­சைப்­ப­டுத்­தும் முயற்­சி­யால் புதிய தொற்­றுக் குழு­மங்­களை ஏற்­ப­டுத்­தும் கிரு­மிப் பர­வலை தடுக்க முடிகிறது என்­றார்.

அறி­வி­யல் தொழில்­நுட்­பம் மற்­றும் ஆய்வக உயி­ரி­யல் தக­வல் கழ­கத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான டாக்­டர் செபாஸ் டியன் மௌரர்-ஸ்ட்ரோ, சிங்­கப்­பூ­ரில் டெல்டா கிரு­மிப் பர­வல் அதி­கம் காணப் படு­வ­தாக தெரி­வித்­தார். டெல்டா கிருமி யால் பெரிய தொற்றுக் குழு­மம் ஏற்­பட்­டது. வட்­டா­ரப் பய­ணி­கள் பல­ருக்கு அந்த வகை தொற்று இருக்­கிறது. இத­னால் டெல்டா கிரு­மிப் பாதிப்பு அதி­க ­முள்­ளது என்று கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொவிட்-19 பல்வேறு நாடுகளில் உருமாறியுள்ளது.