சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா பயண ஏற்பாட்டுக்கு முயற்சி

சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா பயண ஏற்பாட்டுக்கு முயற்சி

2 mins read
2068e818-2f94-4061-ae56-2af565acfad0
ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் (இடது), சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இருவரும் நேற்று இஸ்தானாவில் சந்தித்துப் பேசினர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

சிங்­கப்­பூ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் இடையே இரு­வ­ழிப் பய­ணங்­களை மீண்­டும் தொடங்க இரு நாடு­களும் முயற்­சி­களை மேற்­கொள்­ளும் என்று இரு­நாட்­டுப் பிர­த­மர்களும் தெரி­வித்­துள்­ள­னர்.

பிர­த­மர் லீ சியன் லூங் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சனை நேற்று அதி­பர் மாளி­கை­யில் சந்­தித்து இருதரப்பு உற­வு­கள் குறித்­துப் பேச்சு நடத்­தி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடங்கிய பின்­னர் வெளி­நாட்­டுத் தலை­வர் ஒரு­வர் சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை­ய­ளித்­தி­ருப்­பது இதுவே முதல் முறை. கடந்த மாதம் நியூ­சி­லாந்­துக்­குச் சென்ற திரு மோரி­சன், அடுத்த கட்­ட­மாக சிங்­கப்­பூர் வந்­துள்­ளார்.

இரு தலை­வர்­க­ள­து சந்­திப்­பைத் தொடர்ந்து நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில், கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு எதி­ரான போராட்­டம், இரு நாடு­க­ளுக்­கும் இடையே பய­ணங்­க­ளைத் தொடங்­கு­வது போன்­றவை குறித்து பேசி­ய­தாக திரு லீ தெரி­வித்­தார்.

இதற்கு உள்­கட்­ட­மைப்பு மற்றும் செயல்­மு­றை­களை ஏற்­பாடு செய்ய வேண்டி உள்­ளது.

உடல்­ந­லம், தடுப்­பூசி சான்­றி­தழ்­க­ளைப் பரஸ்­ப­ர­ம் அங்­கீ­க­ரிப்­ப­தி­லி­ருந்து இது தொடங்­கு­கிறது. மின்­னி­லக்க வடி­வத்­தில் இத­னைச் செய்­ய­லாம். அனைத்து ஏற்­பா­டு­களும் தயா­ரா­ன­தும் ​​இரு­தரப்பிலும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த முத­லில் சிறிய அள­வில் விமா­னப் போக்குவரத்­தைத் தொடங்­க­லாம் என்­றார் பிர­த­மர் லீ.

விமா­னப் போக்­கு­வ­ரத்­தைத் தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தாக அதற்­கான நடை­மு­றையை வகுப்­ப­தில் இரு நாடு­களும் ஈடு­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார் திரு மோரி­சன்.

இந்த ஏற்­பாட்­டின் மூலம் பயணம் செய்­யும் வாய்ப்பை, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் படிக்­கும் சிங்­கப்­பூர் மாண­வர்­கள் முத­லில் பெறு­வார்­கள் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, சுகா­தார தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு இரு­த­ரப்பு உடன்­பா­டு­களில் இரு நாடு­களும் நேற்­றுக் கையெ­ழுத்­திட்­டன.

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இடை­யி­லான முழு­மை­யான உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­து­வத் திட்­டத்­தின் கீழ் இரு­நாட்­டுப் பிர­த­மர்­களும் ஆண்­டுக்கு ஒரு­முறை நேர­டி­யா­கச் சந்­திப்­பது வழக்­கம். கொவிட்-19

சூழ­லி­னால் கடந்த ஆண்­டு இணை­யம் வழி இச்­சந்­திப்பு இடம்­பெற்­றது.