பொதுமக்களுக்கு மீண்டும் திறந்துவிடப்படும் ஜுவல்

பொதுமக்களுக்கு மீண்டும் திறந்துவிடப்படும் ஜுவல்

2 mins read
2ac93a0a-a558-4762-bd19-072af74fca64
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3ல் விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு சுவாசப் பரிசோதனை செய்யப்படுவதை நேரில் கண்ட போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜுவல் சாங்கி விமான நிலை­யம் நாளை மறு­நாள் மீண்­டும் பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் சாங்கி விமான நிலை­யத்­தில் கொவிட்-19 குழு­மம் உரு­வா­னதை அடுத்து, கடந்த மாதம் 13ஆம் தேதி­யன்று ஜுவ­லு­டன் சேர்த்து அனைத்து முனை­யங்­களும் மூடப்­பட்­டன.

இந்­நி­லை­யில், நாளை மறு­நாள் ஜூவல் திறந்­து­வி­டப்­பட்­டா­லும் மற்ற முனை­யங்­க­ளுக்­குச் செல்ல பொது­மக்­க­ளுக்கு அனு

­ம­தி­யில்லை.

புதிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக விமான நிலைய ஊழி­யர்­கள் 14,000 பேர் மூன்று பிரிவு ­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அபாய நிலையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இவர்­கள் பிரிக்­கப்­பட்­டுள்­ள­தாக சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் சாங்கி விமான நிலை­யக் குழு­ம­மும் நேற்று தெரி­வித்­தன. ஜுவ­லி­லும் பய­ணி­கள் முனை­யங்­க­ளி­லும் துப்­பு­ர­வுப் பணி­கள் நிறை­வ­டைந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்கிடையே, விமான நிலைய ஊழியர்களுக்கு சுவாசப் பரிசோதனைமுறையை சாங்கி விமான நிலையம் அறிமுகப் படுத்தியுள்ளது.

திட்டத்தின் ஒரு பகுதியாக விமான நிலைய ஊழியர்கள் சிலருக்கு நேற்று சுவாசப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஒரு­முறை மட்­டும் பயன்­ப­டுத்­தப்­படும் சுவா­சப் பரி­சோ­த­னைக் கரு­விக்­குள் ஊழி­யர்­கள் ஊது­வர். சுவா­சப் பரி­சோ­த­னைக் கரு­விக்­குள் உணர்கருவி பொருத்­தப்­பட்­டி­ருக்­கும். பிறகு அந்­தக் கரு­வி­யைக் கொண்டு ஊழி­ய­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளதா என்று இரண்டு நிமி­டங்­க­ளுக்­குள் கண்­டு­பி­டித்­து­வி­ட­லாம். சுவா­சப் பரி­சோ­த­னை­முறை மூலம் ஒரு­வ­ருக்­குக்

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளதா என்­பதை விரை­வில் கண்­டு­பி­டித்து­ வி­ட­லாம் என்­றும் வழக்­க­மான கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­த­னை­யை­விட அதை எளி­தாக

செய்­து­வி­ட­லாம் என்­றும் பரி­சோ­தனை செய்­து­கொள்­வோ­ருக்கு அசௌ­க­ரி­யத்தை அது ஏற்­ப­டுத்­தாது என்­றும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் செய்தி ­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

முனை­யம் 3ல் விமான நிலைய ஊழி­யர்­க­ளுக்கு சுவா­சப் பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­வதை அவர் நேற்று நேரில் சென்று பார்த்­தார்.

இந்­நி­லை­யில், முனை­யங்­களில் நடை­மு­றை­ப­டுத்­தப்­படும் மேம்­

ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளு­டன் ஊழி­யர்­க­ளுக்கு பழக்­கம் ஏற்­பட, ஆறு மாதங்­க­ளுக்கு சிறப்பு மாதாந்­திர படித்­தொகை வழங்­கப்­படும் என்­றும் அதற்­காக $15 மில்­லி­யன் ஒதுக்­கப்­படும் என்­று­ம் தெரிவிக்­கப்­பட்­டது.