இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

2 mins read

இலங்­கை­யில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை ரத்து செய்ய வேண்­டும்­என ஐரோப்­பிய ஒன்­றிய நாடா­ளு­மன்­றில் தீர்­மா­னம் ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

ஸ்பெ­யின்-மொரோக்கோ எல்­லைப் பகுதி, ரஷ்யா மற்­றும் இலங்­கை­யில் உள்ள மனித உரிமை விவ­கா­ரங்­கள் தொடர்­பில் ஐரோப்­பிய ஒன்­றிய நாடா­ளு­மன்­றத்­தில் மூன்று தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இலங்­கை­யில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் ரத்து செய்­யப்­பட வேண்­டும் என்ற தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக 628 வாக்­குகளும் எதி­ராக 15 வாக்­குகளும் அளிக்­கப்­பட்­ட­து­டன் 40 உறுப்­

பி­னர்­கள் வாக்­க­ளிப்­பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

இலங்­கை­யில் மனித உரிமை நிலைமை மோச­ம­டை­வ­தா­க­வும் அண்­மை­யில் ஐக்­கிய நாடு­கள் அமைப்­பில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் தீர்­மா­னத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சந்­தே­கத்­தின் பேரில் பொது­மக்­க­ளைக் கைது செய்­ய­வும் தடுத்து வைக்­க­வும் அதி­கா­ரி­க­ளுக்கு அள­வுக்கு அதி­க­மான அதி­கா­ரங்­களைப் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டம் வழங்­கு­வ­தாக அறிக்­கை­யில் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த பயங்­க­ர­வா­தத் தடைச்­

சட்­டத்­தின் மூலம் மக்­கள் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் நிகழ்­வ­தா­க­வும் பல­வந்­த­மாக ஒப்­பு­தல் வாக்கு

மூலங்­கள் பெறப்­ப­டு­வ­தா­க­வும்

சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை ரத்து செய்து தீவி­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை அமல்­ப­டுத்த வேண்­டும் என­வும் இது அனைத்­து­லக அணுகு ­மு­றை­க­ளுக்கு உட்­பட்­டது என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2017ம் ஆண்டு இலங்­கைக்கு மீண்­டும் ஐரோப்­பிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலு­கைத் வழங்­கப்­பட்­டது. இலங்­கை­யில் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அழுத்­தம் கொடுப்­ப­தற்­கான ஓர் வழி­யாக இந்த சலு­கைத் திட்­டத்தைப் பயன்­ப­டுத்­திக்கொள்­ளு­மாறு தீர்­மா­னம் நிறை­வேற்­றிய உறுப்­பி­னர்­கள் கோரி­உள்­ள­னர். இலங்­கைக்கு தற்­கா­லிக அடிப்­ப­டை­யில் வழங்­கப்­பட்­டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலு­கைத் திட்­டத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்­தும் சாத்­தி­யங்­கள் உள்­ள­னவா என்­பதை உன்­னிப்­பாக மதிப்­பீடு செய்­யு­மா­றும் கோரி­யுள்­ள­னர்.