சமூக அளவில் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஒன்பதாக குறைப்பு

சமூக அளவில் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஒன்பதாக குறைப்பு

1 mins read
57689f90-03bf-4cea-8461-eb0fee5839bb
அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 12) சமூக அளவில் 12 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கூடுதல் பரிசோதனையில் மூவருக்குத் தொற்று இல்லை என உறுதியானதை அடுத்து, சமூகத்தொற்று எண்ணிக்கையைச் சுகாதார அமைச்சு ஒன்பதாக குறைத்துள்ளது.

சமூகத்தில் தொற்று உறுதியானவர்களில் ஐவருக்கு முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில்லை.

அவர்களில் அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் பணிபுரியும் துப்புரவாளர் ஒருவரும் அடங்குவார்.