இலவச பரிசோதனை தொடங்கியது

ஊழியர் மூவர்க்குத் தொற்று; அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதி நான்கு நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்

கடந்த இரு வாரங்­களில் அயோன் ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­கு­திக்கு வந்து சென்ற நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தற்­காக ஸ்காட்ஸ் சாலை­யில் ஒரு மருத்­துவ மையத்­திற்கு நேற்­றுக் காலை வந்­தி­ருந்­த­னர்.

ஷா சென்­டர் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள ராஃபிள்ஸ் மருத்­துவ மையத்­தில் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­வதற்காகக் காலை 8.30 மணி­யில் இருந்தே அந்­தக் கடைக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் அவர்­கள் நீண்ட வரி­சை­யில் நின்­றி­ருந்­த­தைக் காண முடிந்­தது.

வரி­சை­யில் நின்­றி­ருந்த பல­ரும் தங்­க­ளது பாது­காப்பை உறு­திப்­படுத்­திட பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தா­கக் கூறி­னர்.

தங்­க­ளைச் சுற்­றி­யுள்­ளோ­ரின் பாது­காப்­பிற்­கா­கத் தாமும் தம் கண­வ­ரும் பரி­சோ­தனை செய்­து­கொள்ள விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் திரு­மதி அபர்ணா, 71.

அயோன் ஆர்ச்­சர்­டில் உள்ள டெய்சோ கடைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தாங்­கள் வந்­தி­ருந்­த­தாக திரு­மதி அபர்ணா கூறி­னார். தாங்­கள் ஏற்­கெ­னவே தடுப்­பூசி போட்­டு­விட்­ட­தால் பாது­காப்­பாக உணர்­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

அந்­தக் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள கார்­டி­யன் மருந்­த­கத்­தில் விற்­பனை மேம்­பாட்­டா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் 57 வய­துப் பெண்ணை கொரோனா தொற்­றி­யி­ருந்­த­தைச் சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் உறு­திப்­ப­டுத்­தி­யது. அவர், அந்­தக் கடைத்­தொ­கு­தி­யில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட மூன்­றா­வது பணி­யா­ளர்.

இதைத் தொடர்ந்து, அந்தக்­ க­டைத்­தொ­குதி மூடப்­பட்­டது. அங்கு பணி­பு­ரி­வோ­ரும் வந்­து­சென்­றோ­ரும் கொரோனா பரி­சோதனை செய்­து­கொள்­ள­லாம் என அமைச்சு அறி­வித்­தது.

அங்­குள்ள கடை­க­ளின் பணி­யா­ளர்­கள் அனை­வ­ரும் நேற்று நண்­ப­கல் 12 மணிக்­குள் எச்­சில்/சளி மாதி­ரிப் பரி­சோ­தனை செய்து­கொள்ள, ஓர் இணை­யப்­பக்­கம் வழி­யாக முன்­ப­திவு செய்­து­கொள்­ளும்­படி தெரி­விக்­கப்­பட்­டது. அத்­து­டன், கூட்­டத்­தைத் தவிர்க்க, தாங்­கள் முன்­ப­திவு செய்­துள்ள நேரத்­திற்­குச் சரி­யாக வரும்­ப­டி­யும் அயோன் நிர்­வா­கம் அவர்­க­ளுக்கு நினை­வூட்­டி­யது.

துப்புரவு செய்யவும் கிரு­மி­நாசினி தெளிக்கவும் ஏதுவாக நான்கு நாள்­க­ளுக்கு, அதா­வது வரும் புதன்­கி­ழமை காலை 7 மணி­வரை அயோன் ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­குதி மூடப்­பட்­டி­ருக்­கும்.

இம்­மா­தம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அக்­க­டைத்­தொ­கு­திக்கு வந்­து­சென்­றோர் அல்­லது அங்­குள்ள சேவை­க­ளை­யும் வச­தி­க­ளை­யும் பயன்­ப­டுத்­தி­யோர்க்கு நேற்று முதல் இல­வச கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. அத்­து­டன், கடந்த மே 28ஆம் தேதி­ முதல் ஜூன் 11ஆம் தேதி வரை அங்கு பணி­பு­ரிந்­தோ­ரும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!