தொற்று; புக்கிட் மேரா வியூ சந்தை மூடல்

2 mins read
72d99f5a-8a5b-4587-8a3e-11075d196666
எண் 115 புக்­கிட் மேரா வியூ சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் ஒரு மாதுக்கும் ஓர் ஆடவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து சந்தையையும் உணவங்காடியையும் மருந்தடித்து சுத்தப்படுத்த வசதியாக அங்குள்ள 182 கடை களும் மூடப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எண் 115 புக்­கிட் மேரா வியூ சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானதை அடுத்து அந்த நிலை­யத்­தில் செயல்­படும் 182 கடை­களும் நேற்று முதல் மூடப்­பட்டு இருக்­கின்­றன.

அந்­தச் சந்தை நாளை வரை மூடப்­பட்டு இருக்­கும். தஞ்­சோங் பகார் நகர மன்­றம், தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், புக்­கிட் மேரா வியூ வியா­பாரிகள் குழு ஆகி­யவை அந்­தக் கடைக்­கா­ரர்­களிடம் கடை­கள் மூடப்­படுவது பற்றி தெரி­வித்து விளக்­கம் அளித்து வரு­வ­தாக தஞ்­சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரேரா நேற்று கூறி­னார். அந்­தச் சந்­தை­யும் நிலை­ய­மும் மூடப்­படுவது பற்றி அப்­ப­குதி மக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்த அறி­விப்பு பல­கை­கள் வைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஃபேஸ்புக்­கில் அவர் தெரி­வித்­தார். இதனிடையே, கடை­களை மூடவேண்டிய தேவையைக் கடைக்­கா­ரர்­கள் புரிந்துகொள்­கி­றார்­கள் என்று அவர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெ­ய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது. உதவி ஏதே­னும் கிடைக்­குமா என்று சிலர் கேட்­ட­தா­க­வும் அது பற்றி உரிய அமைப்­பு­க­ளு­டன் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் திரு­வாட்டி பெரேரா குறிப் பிட்டார்.

அந்­தச் சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் செயல்­படும் ஒரு கடை­யில் உதவி­யா­ள­ராக வேலை பார்த்த 82 வயது மாதுக்கு தொற்று உறு­தியானது. அந்த மாது இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதற்கு முன்­ன­தாக அங்கு 74 வயது ஆட­வ­ருக்­குத் தொற்று ஏற்­பட்டு இருந்­தது. அந்த ஆட­வ­ரும் இரு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்.

பாதிக்கப்பட்ட மாதுக்கு கடந்த வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். அடுத்த நாள் பலதுறை மருந்தகத்திற்குச் சென்றார்.

அவருக்குத் தொற்று இருந்தது ஏஆர்டி பரிசோதனையில் தெரியவந்தது. பிறகு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை யும் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியது.

அதனை அடுத்து அந்த மாது தனிமைப்படுத்தப்பட்டார்.

துப்புரவுப் பணிக்காக உணவங்காடி நிலையக் கடைகள் உட்பட 182 கடைகள் அடைப்பு