கொரோனா மரணம்: மறுமதிப்பீடு செய்யும் இந்திய மாநிலங்கள்

கொரோனா மரணம்: மறுமதிப்பீடு செய்யும் இந்திய மாநிலங்கள்

2 mins read

கொவிட்-19 தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை குறைத்­துக் காட்­டப்­ப­டு­வ­தாக எழுந்த புகார்­களை அடுத்து, சில இந்­திய மாநிலங்­கள் கொரோனா மர­ணக் கணக்­கை நேர்செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்­தி­யா­வில் கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்­தா­லும், மரண எண்­ணிக்கை ஏறு­மு­க­மா­கவே இருக்­கிறது. தொற்றால் இறந்­த­வர்­களில் விடு­பட்­டுப்­போனோரை இப்­போது கணக்­கில் சேர்த்து வரு­வதே அதற்­குக் கார­ணம்.

சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி, கடந்த 24 மணி நேரத்­தில் 3,921 பேர் கிரு­மித்­தொற்­றால் மாண்­டு­போ­யி­னர். அவர்­களில் 2,771 பேர் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள். 2,288 'பழைய' கொரோனா மர­ணங்­களை அம்­மா­நி­லம் கணக்­கில் எடுத்­துக்­கொண்­டது.

இப்­படி, விடு­பட்­டுப்­போன கொரோனா மர­ணங்­களை கணக்­கில் சேர்க்­கும் பணியை அந்த மா­நி­லம் கடந்த மே 21ஆம் தேதி­யில் இருந்து மேற்­கொண்டு வரு­கிறது. அந்த வகை­யில், கடந்த 28 நாள்­களில் மட்­டும் கூடு­த­லாக 11,894 பேரின் பெயர்­கள், கொரோனா மர­ணப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தி­யா­வில் உச்­ச­மாக கடந்த புதன்­கி­ழமை 6,141 கொரோனா மர­ணங்­கள் பதி­வா­கின. அவற்­றில் 71% 'பழைய' மர­ணங்­கள். குறிப்­பாக, அன்று பீகார் மாநி­லம் மட்­டும் 3,951 மர­ணங்­க­ளைப் பதிவு­செய்­தது.

ஒட்­டு­மொத்­தத்­தில், கடந்த 30 நாள்­களில் இந்­தி­யா­வில் பதி­வான கொவிட்-19 மர­ணங்­களில் ஐந்­தில் ஒன்று பதி­வு­செய்­யப்­ப­டா­மல் விட்­டுப்­போன 'பழைய' மர­ணம் என்று இந்­துஸ்­தான் டைம்ஸ் செய்தி கூறு­கிறது.

மகா­ராஷ்­டிரா, உத்­த­ரா­கண்ட், பீகார், கோவா, பஞ்­சாப், உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­கள் இப்­படி விடு­பட்­டுப்­போன கொரோனா மர­ணக் கணக்­கைச் சரி­செய்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், கேர­ளா­வும் அப்­பட்­டி­ய­லில் இணை­ய­வி­ருக்­கிறது.

தமிழ்­நாட்­டி­லும் 'அரசு வெளி­யி­டும் கொரோனா மரண எண்­ணிக்கை உண்­மை­நி­லை­யைக் காட்­டு­வ­தாக இல்லை' என்று வழக்கு தொடரப்பட்டதையடுத்து, அதன் தொடர்­பில் இம்­மா­தம் 28ஆம் தேதிக்­குள் அறிக்கை தாக்­கல் செய்­யும்­படி சென்னை உயர் நீதி­மன்­றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

'பத்து மடங்கு அதிகம்'

இத­ற்கிடையே, தெலுங்­கானா மாநிலத்­தில் 2020 ஏப்­ரல் முதல் இவ்­வாண்டு மே வரை 3,275 பேர் கொரோனா தொற்­றால் மாண்­டு­போ­ன­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் கூறு­கின்­றன.

ஆனால், அதே கால­கட்­டத்­தில் மாநி­லத் தலை­ந­கர் ஹைத­ரா­பாத்­தில் மட்­டும் 32,752 மர­ணங்­கள் கூடு­த­லா­கப் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக 'தி இந்து' செய்தி கூறு­கிறது. ஹைத­ரா­பாத் மாந­க­ராட்சி வழங்­கிய இறப்­புச் சான்­றி­தழ்­களின் அடிப்­ப­டை­யில் இந்த எண்­ணிக்கை கணக்­கி­டப்­பட்­டுள்­ள­தாக அந்த ஊட­கம் தெரி­வித்­தது.

ஒப்பீட்டளவில், கோல்­கத்­தா­விலும் சென்­னை­யி­லும் முறையே அதிகாரபூர்வ எண்ணிகையைக் காட்டிலும் 4.5 மற்­றும் 3.3 மடங்கு கூடு­தல் மர­ணங்­கள் பதி­வாகி உள்ளதாக அச்செய்தி கூறுகிறது.