இனியும் இந்த நெருக்கடி தொடர வேண்டாம்

இனியும் இந்த நெருக்கடி தொடர வேண்டாம்

3 mins read
26ffd887-7170-4489-a482-b06a6ab62e3d
பினாங்கின் 'ஆயர் இத்தாம்' சந்தை வளாகத்தில் பொதுமக்கள் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடப்பதை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். படம்: பெர்னாமா -

நான்கு கட்ட 'தேசிய மீட்சித் திட்டம்' குறித்து மலேசிய பிரதமர் முகைதீன்

தற்­போது மலே­சி­யா­வில் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்ட முடக்­க­நி­லை­யால் அர­சாங்­கத்­திற்கு நாள் ஒன்­றுக்கு ஒரு பில்­லி­யன் ரிங்­கிட் (S$320 மி.) செல­வா­வ­தாக மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின் நேற்று தெரி­வித்­தார்.

"நாம் இப்­ப­டியே தொடர முடி­யாது. இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து மிக விரை­வில் நாம் மீண்டு வந்­தாக வேண்­டும்," என்­றார்.

மீண்டு வரு­வ­தற்­கான நான்­கு கட்­டத் திட்­டம் குறித்த அவ­ரது உரை மலே­சி­யர்­க­ளுக்­காக நேற்று நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­னது.

'தேசிய மீட்­சித் திட்­டம்' என்று அழைக்­கப்­படும் இத்­திட்­டத்­தின்­படி, செப்­டம்­பர் மாதம் முதல் மலே­சியா அதன் பொரு­ளி­யல் சார்ந்த நட­வ­டிக்­கை­கள், சமூக நட­வ­டிக்­கை­கள், நாடா­ளு­மன்­றம் ஆகி­ய­வற்­றைப் படிப்­ப­டி­யா­கத் தொடர முடி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அக்­டோ­பர் மாத இறு­திக்­குள் நாட்­டின் பெரும்­பா­லான பொரு­ளி­யல் பிரி­வு­கள் திறந்­து­வி­டப்­படும் என்று தற்­போ­தைய முன்­னுரைப்பை ஒட்­டிக் கூறப்­ப­டு­கிறது.

அண்மை கால­மாக மலே­சி­யா­வில் அதி­க­மான கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­வதை எதிர்­கொள்ள, மலே­சியா அதன் மூன்­றா­வது நாட­ளா­விய முடக்­க­நி­லை­யில் உள்­ளது.

தற்­போ­தைய முடக்­க­நி­லையை 'தேசிய மீட்­சித் திட்­டத்­தின்' முதல் கட்­டம் என்­றார் திரு முகை­தீன். நாட்­டில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­படும் நிலை ஏற்­பட, பல்­வேறு அம்­சங்­கள் குறித்­தும் அவர் விளக்­கி­னார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் சற்று தளர்த்­தப்­ப­டு­வதே இரண்­டா­வது கட்­ட­மா­கும். தொடர்ந்து சமூக நட­வ­டிக்­கை­களும் பய­ணத் தடை­களும் இக்­கட்­டத்­தில் அம­லில் இருக்­கும். ஆனால் மலே­சி­யா­வில் பதி­வா­கும் ஒரு நாள் தொற்று எண்­ணிக்கை 4,000க்குக் கீழ் இருந்­தால் மட்­டுமே இரண்­டாவது கட்­டம் தொடங்­கும். அத்­து­டன் மக்­கள்­தொ­கை­யில் 10 விழுக்­காட்­டி­ன­ரா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும் என்­றார். இது ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் நிக­ழ­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒரு நாள் தொற்று எண்­ணிக்கை 2,000க்குக் கீழ் பதி­வா­கும்­போ­தும் 40% மக்­கள்­தொ­கைக்­குத் தடுப்­பூசி போடப்­பட்ட பிற­கும் மூன்­றாவது கட்­டத் தளர்­வு­நிலை ஏற்­ப­ட­லாம். அக்­டோ­பர் மாத இறுதி­ ஆ­க­லாம் என எதிர்­பார்க்­கப்­படும் இம்­மூன்­றாம் கட்­டத் தளர்­வின்­போது பெரும்­பா­லான பொரு­ளியல் நட­வ­டிக்­கை­கள் அனு­ம­திக்­கப்­படும். இருப்­பி­னும் சமூக நட­வடிக்­கை­கள் தொடர்­பில் ஒரு சில கட்­டுப்­பா­டு­கள் இருக்­கும்.

மலே­சி­யா­வில் 60 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­து­டன் ஒரு நாள் தொற்று எண்­ணிக்கை 500க்குக் கீழ் பதி­வாகும்­போது முழு தளர்­வு­நிலை முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது. இது நவம்­பர் மாதம் முதல் தொடங்­கக்­கூ­டும்.

"தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட முடக்­க­நி­லை­யால் நம் வாழ்­வா­தா­ரங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இரு­ளில் இப்­போது இருக்­கும் நம்­மால் வெளிச்­சத்தை மெல்ல மெல்­லக் காண முடி­கிறது," என்­றார் திரு முகை­தீன்.

தடுப்­பூசி போடப்­பட்ட விகி­தத்­துக்கு நிக­ராக மீட்­சித் திட்­டம் இருந்­தால் தளர்வு நிலை வெற்றி­பெ­றும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார் அவர்.

இவ்­வாண்டு அதன் கொவிட்-19 தொற்று எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் மலே­சியா திண­று­கிறது. மே 29ஆம் தேதி­யன்று 9,020 புதிய தொற்று சம்­ப­வங்­களே உச்­ச­மாக இருந்­தது.

ஒரு முறை மட்­டுமே இவ்­வாண்டு மார்ச் 29ஆம் தேதி­யன்று 1,000க்குக் கீழ் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

இந்­நி­லை­யில் ஆகஸ்ட் 1ல் முடி­வ­டை­வ­தாக உள்ள தேசிய அவ­ச­ர­நிலை குறித்து இன்று மலே­சிய மன்­னர் அப்­துல்லா அக­மது ஷா, மேலும் எட்டு மலே­சிய மன்­னர்­க­ளைச் சந்­தித்­துப் பேச­வுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.