சிங்கப்பூர் மக்கள்தொகை 5.69 மி. 10 ஆண்டுகளில் மக்கள் பெருக்கம் வரலாறு காணா குறைவு; ஒற்றையர் அதிகம்; குழந்தை பிறப்பு சரிவு

சிங்­கப்­பூ­ரின் மக்­கள்தொகை வளர்ச்சி சுதந்­தி­ரம் அடைந்­தது முதல் இதுவரை இல்­லாத அள­வுக்கு கடந்த 10 ஆண்­டு­களில் மிக­வும் குறை­வாக இருக்­கிறது. அதே கால­கட்­டத்­தில் ஒற்­றை­யர் எண்­ணிக்கை கூடிவிட்டது.

திரு­ம­ணம் செய்­து­கொண்டோர் பெற்றுக்­கொண்ட பிள்­ளை­க­ளின் எண்­ணிக்­கை­யும் முன்­னி­லும் குறை­வாக இருக்­கிறது.

மக்­கள்தொகை கணக்­கெ­டுப்பு பத்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடத்­தப்­ப­டு­கிறது. அதன்­படி 2010 முதல் 2020 வரைப்­பட்ட பத்து ஆண்­டு­க­ளுக்­கான நாட்­டின் 6வது மக்­கள்தொகை கணக்கெடுப்பு விவ­ரங்­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. அதில் இவை அடங்கி இருக்­கின்­றன.

எல்லா இன, எல்லா வயது சிங்­கப்­பூரர்­களும் முன்­னி­லும் சிறப்­பாக கல்வி கற்­ற­வர்­க­ளாக ஆகி இருக்­கி­றார்­கள்.

சம­யம் சாரா­த­வர்­கள் என்று தங்­க­ளைக் கரு­திக்­கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை கூடி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் மொத்த மக்­கள்தொகை 2010ல் 5.077 மில்­லி­யன். இது 2020ல் 5.686 மில்­லி­ய­னா­கக் கூடி இருக்­கிறது. மொத்த மக்­கள்தொகை ஆண்­டுக்கு 1.1% அதி­க­ரித்­துள்­ளது. இது சுதந்­தி­ரம் பெற்­றது முதல் ஆகக் கு­றைான அள­வா­கும்.

குடி­மக்­கள் எண்­ணிக்கை 3.23 மில்­லி­ய­னில் இருந்து 3.52 மில்­லி­ய­னா­கி­யது. நிரந்­த­ர­வா­சிகள் எண்­ணிக்கை ஏறத்­தாழ 0.5 மில்­லி­ய­னா­கவே இருக்­கிறது. சென்ற ஆண்­டு மக்­களில் 15.2 விழுக்காட்டினர் 65 அதற்­கும் அதிக வய­தா­ன­வர்­கள்.

இது 2010ல் 9% ஆக இருந்­தது. சரா­சரி வயது 37.4லிருந்து 41.5 ஆகக் கூடி உள்­ளது. ஒற்­றை­யர் எண்­ணிக்கை கூடி உள்­ளது. 25 முதல் 34 வரை வய­துள்ள ஒற்றையர்­ எண்ணிக்கை ஆக அதி­க­மாக கூடி இருக்­கி­றது. 25 முதல் 29 வரை வய­துள்­ள­வர்­களில் ஒற்றை ஆட­வர் விகி­தம் 81.6% ஆகி­யது. பெண்­களில் இந்த விகிதம் 69% ஆகக் கூடி­யது.

ஒற்றை­யர்­களில் குறைந்த கல்வி கற்ற ஆட­வர்­கள் அதி­கம். பெண்­களில் இது நேர் மாறாக இருக்­கிறது.

மண­மா­ன­வர்­கள் குறை­வா­கவே பிள்ளை பெற்­றுக்கொண்­ட­னர். குறிப்­பாக அதி­கம் கல்வி கற்ற பெண்­கள் குறை­வாக பிள்ளை­களைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூர் வாசி­யான 40 முதல் 49 வரை வய­துள்ள ஒரு பெண்­ணுக்­குப் பிறந்த பிள்­ளை­கள் சரா­சரி எண்­ணிக்கை 2010ல் 2.02 ஆக இருந்­தது. இது 2020ல் 1.76 ஆகக் குறைந்­தது. இந்த வய­துப் பிரி­வினரில் பல்­க­லைக்கழக பட்ட­தா­ரி­க­ளி­டையே இந்த விகி­தம் சென்ற ஆண்­டில் 1.66 பிள்ளை­க­ளாக இருந்­தது.

பிள்­ளை­ இல்­லா­த­வர்­கள் விகி­தம் 2020ல் 13.5% ஆகக் கூடி­யது.

சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­னி­லும் படித்­த­வர்­களாக இருக்கிறார்கள். 25 அதற்­கும் அதி­க­வயதுள்­ள­வர்­களில் 10 பேரில் ஏறக்­கு­றைய ஆறு பேர் உயர்­நி­லைக் கல்­விக்­குப் பிந்தைய கல்வி அல்­லது உயர் கல்வி கற்­ற­வர்­கள்.

இதில் சீனம், மலாய், இந்­திய சமூ­கங்­கள் அனைத்திலும் மேம்­பாடு இருக்­கிறது. ஒட்­டு­மொத்த கல்வி அறிவு அதி­க­மாகி உள்­ளது.

வீடு­களில் ஆங்­கி­லம் அதி­கம் பேசு­வது கூடி இருக்­கிறது. ஐந்து, அதற்­கும் அதிக வய­துள்ளவர்­களில் இந்த விகி­தாச்­சா­ரம் சென்ற ஆண்டில் 48.3% ஆகக் கூடி­யது. 2010ல் இந்த அளவு 32.2%தான்.

சம­யம் சாரா­த­வர்­கள் அதி­க­மாகி இருக்­கி­றார்­கள். 15, அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­களில் 31.1% பௌத்­தர்­கள் என்று தங்­களைச் சொல்­லிக்கொண்­ட­னர். 8.8% தாவோ­யிஸ்­டு­கள்; 18.9% கிறிஸ்­து­வர்­கள்; 15.6% முஸ்­லிம்­கள்; 5% இந்­துக்­கள்.

தாங்­கள் எந்த சம­யத்­தை­யும் சேர்ந்­த­வர்­கள் அல்­லர் என்று தெரி­வித்த சிங்­கப்­பூ­ரர்­கள் விகி­தம் சென்ற ஆண்­டில் 20%.

இது 2010ல் 17% ஆக இருந்­தது. எல்லா வய­துப் பிரி­வி­ன­ரி­டத்­தி­லும் இந்த நிலை காணப்­ப­டு­வதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!