அதிகபட்சம் இருவர் சேர்ந்து உண்ணலாம்

அதிகபட்சம் இருவர் சேர்ந்து உண்ணலாம்

3 mins read
f6a96953-8510-4111-adb6-5f1a46a56246
21ஆம் தேதி முதல் அதிகபட்சம் ஐவர் சேர்ந்து உண்ணலாம் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவ்வரம்பு இருவராகக் குறைக்கப்பட்டுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாளை மறுநாள் திங்கட்கிழமையில் இருந்து உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி

உண­வுக்­க­டை­களில் நாளை மறு­நாள் முதல் அமர்ந்து உண்ண அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது. ஆயி­னும், முன்­னர் அறி­விக்­கப்­பட்­ட­படி அதி­க­பட்­சம் ஐவர் என்றில்லாமல், ஒரு குழு­விற்கு இரு­வர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று தெரி­வித்­தார்.

ஜூலை மாத நடுப்­ப­கு­தி­யில் இருந்து ஒரு குழு­விற்கு அதி­க­பட்­சம் ஐவர் இடம்­பெ­றும் வகை­யில் வரம்பு அதி­க­ரிக்­கப்­படும் என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு கான், நேற்­றைய செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது கூறி­னார்.

உள்­ளூ­ரில் கொரோனா பர­வல் அதி­க­ரித்­தி­ருப்­பதை அடுத்து, இந்த அறி­விப்பு வெளி­யா­கி­ இருக்கிறது. 115 புக்­கிட் மேரா வியூ சந்தை, உணவு மையத்­தில் ஒரு புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வாகியுள்ளது.

சமூ­கத்­தில் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வித­மாக கடந்த மாதம் 16ஆம் தேதி­யிலிருந்து உண­வுக்­கடை­களில் அமர்ந்து உண்ண அனு­மதி இல்லை.

கடந்த வாரத்­தில் மட்­டும் சமூ­கத்­தில் 94 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தா­கச் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் குறிப்­பிட்­டார். அதற்கு முந்­திய வாரத்­தில் இந்த எண்­ணிக்கை 41ஆக இருந்­தது. தொடர்­பின்றி பாதிக்­கப்­பட்­டோர் விகி­தம் 19% என்ற அள­வில் நிலை­யாக இருந்து வரு­கிறது.

கொரோனா பரி­சோ­த­னைத் திற­னும் தொடர்­பு­க­ளின் தட­ம­றி­யும் திற­னும் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாலும் மக்­கள்­தொ­கை­யில் நல்­ல­தொரு விகி­தத்­தி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தா­லும் கிரு­மிப் பர­வல் தடுப்­பில் சிங்­கப்­பூர் முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தாக திரு ஓங் கூறி­னார்.

நாளை மறு­நாள் முதல், ஒரு குழு­வில் ஒரே குடும்­பத்­தைச் சேராத இருவர்க்குமேல் இருந்­தால், அவர்­கள் பல மேசை­களில் பிரிந்து அமர்ந்­தா­லும், உண­வ­கங்­களில் ஒன்­றா­கச் சேர்ந்து உண்ண அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள் என்று அமைச்சு கூறி­யி­ருக்­கிறது.

ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் பல மேசை­களில் அமர்ந்­த­படி உண்­ண­லாம் என்று அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் குறிப்­பிட்­டார்.

உண­வ­கங்­களில் இசைத்­தட்டு ஒலிக்­க­ அனு­ம­தி­யில்லை. அங்கு குழுக்­க­ளுக்கு இடையே குறைந்­த­பட்­சம் ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­பேணப்­பட வேண்­டும்.

"அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் அதி­கப்­ப­டுத்­தப்­படும். பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் மீறப்­பட்­டால் உறு­தி­யான அம­லாக்க நட­வடிக்கை எடுக்­கப்­படும். உண்­ணும்­போது அல்­லது பானம் அருந்­தும்­போது தவிர, மற்ற நேரங்­களில் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும்," என்று அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இத­னி­டையே, அடுத்த மாத நடுப்­ப­கு­தி­வரை திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சி­க­ளுக்­கான தடை நீடிக்­கும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அதி­க­பட்­சம் குழு­விற்கு இரு­வர் என்ற வகை­யில், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­களும் உடற்­த­குதி நிலை­யங்­களும் முகக்­க­வ­ச­மின்றி உள்­ள­ரங்கு விளை­யாட்டு, பயிற்சி நட­வடிக்­கை­களை நாளை மறு­நாள் முதல் தொடங்­க­லாம். வகுப்பு­கள் எனில் பயிற்­று­ந­ரு­டன் சேர்த்து 30 பேர்­வரை பங்­கேற்­க­லாம்.

தனி­ந­பர்­க­ளுக்கு இடையே குறைந்­தது 2 மீட்­டர், குழுக்­களுக்கு இடையே 3 மீ. என, பாது­காப்பு இடை­வெ­ளி­யு­டன் அவை இடம்­பெற வேண்­டும்.

முகக்­க­வ­சத்­து­டன் கூடிய நட­வ­டிக்­கை­க­ளி­லும் வெளிப்­பு­றத்­தில் முகக்­க­வ­ச­மில்லா நட­வ­டிக்­கை­களி­லும், அதி­க­பட்­சம் குழு­விற்கு ஐவர், வகுப்­பிற்கு 30 பேர் என்ற வரம்­பில் பங்­கேற்­க­லாம்.

வேலை­யி­டங்­க­ளி­லும் பொது இடங்­க­ளி­லும் கலந்­து­ற­வா­ட­லைக் குறைத்து, அதன்­வழி கொரோனா தொற்­றும் அபா­யத்­தைக் கட்­டுப்­படுத்­தும் வித­மாக, வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது இயல்­பான நடை­மு­றை­யா­கத் தொட­ரும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.