கொவிட்-19 மரணம் நான்கு மில்லியனைத் தாண்டியது

கொவிட்-19 தொற்­றால் உல­கம் முழு­வ­தும் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை நான்கு மில்­லி­யனைத் தாண்­டி­விட்­டது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­களில் கொரோனா பாதிப்­பும் அத­னால் ஏற்­படும் இறப்­பும் குறைந்து வரு­கின்­றன.

ஆனால், உரு­மா­றிய 'டெல்டா' கிருமி பெரும் அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்ள நிலை­யில், பல நாடு­க­ளி­லும் தடுப்­பூ­சிப் பற்­றாக்­குறை நில­வு­கிறது.

கொரோனா மரண எண்­ணிக்கை இரண்டு மில்­லி­யன் என்ற மைல்­கல்லை எட்ட ஓர் ஆண்­டுக்­கு­மேல் ஆன நிலை­யில், 166 நாள்­க­ளி­லேயே அதனால் மேலும் இரண்டு மில்­லி­யன் பேர் மர­ணமடைந்­து­விட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் பகுப்­பாய்வு தெரி­விக்­கிறது.

அமெ­ரிக்கா, பிரே­சில், இந்­தியா, ரஷ்யா, மெக்­சிகோ ஆகிய நாடு­கள் கொரோனா மர­ணப் பட்­டி­ய­லில் முதல் ஐந்து இடங்­களில் உள்­ளன. கிரு­மித்­தொற்­றால் மாண்­டோ­ரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இந்த நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

ஆயி­னும், மக்­கள்­தொ­கை­யைப் பொறுத்­த­மட்­டில், பெரு, ஹங்­கேரி, போஸ்­னியா, செக் குடி­ய­ரசு, ஜிப்­ரால்­டர் ஆகிய நாடு­களில் இறப்பு விகி­தம் அதி­க­மா­க­வுள்­ளது.

கடந்த மார்ச்­ மாதம் முதல் லத்தீன் அமெ­ரிக்க நாடு­க­ளி­ல் கிரு­மிப் பர­வல் மோச­மாக இருந்து வரு­கிறது. உல­கில் கொரோனா தொற்­றிய 100 பேரில் 43 பேர் அந்த நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். அதே போல, இறப்பு விகி­தத்­தி­லும் பத்­தில் ஒன்­பது இடங்­களை அந்த நாடு­களே பிடித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், அதி­கா­ர­பூர்வ மரண எண்­ணிக்கை குறைத்­துக் காட்­டப்­ப­டு­வ­தா­கச் சுகா­தார வல்லு­நர்­கள் கரு­து­கின்­ற­னர். உலக சுகா­தார நிறு­வ­ன­மும் கொரோனா மர­ணம் இன்­னும் அதி­க­மாக இருக்­கும் என மதிப்­பிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!