$2.2 பி. வேலை ஆதரவு

$2.2 பி. வேலை ஆதரவு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் உள்ள 140,000க்கும் மேற்­பட்ட முத­லா­ளி­கள் இம்­மா­தம் 30ஆம் தேதி முதல் $2.2 பில்­லி­யன் பெறு­மான வேலை ஆத­ர­வுத் திட்ட வழங்­கு­தொ­கை­யைப் பெறு­வர். இதன் மூலம் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட உள்­ளூர் ஊழி­யர்­கள் பல­ன­டை­வார்­கள் என்று நிதி அமைச்­சும் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் கூட்­டாக அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளன.

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரியில் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட வரவு செல­வுத் திட்ட அறிக்­கை­யில் சம்­பள ஆத­ர­வுத் திட்ட அறி­மு­கம் இடம்­பெற்­றி­ருந்­தது. இப்­போது வழங்­கப்­படும் தொகை­யை­யும் சேர்த்து இத்­திட்­டம் மூலம் $26.7 பில்­லி­யன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான மாதங்­க­ளுக்கு தங்­க­ளது உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு மத்­திய சேம நிதி பங்­க­ளிப்­பைச் செலுத்­திய முத­லா­ளி­கள் இப்புதிய வழங்­கு­ தொ­கைக்­குத் தகு­தி­பெ­று­வர்.

விமா­னப் போக்­கு­வ­ரத்து, ஆகா­ய­வெளி மற்­றும் சுற்­றுப்­ப­ய­ணம் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த முத­லா­ளி­கள் ஜன­வரி முதல் மார்ச் வரை வழங்­கிய சம்­ப­ளத்­தின் முதல் $4,600 தொகை­யில் 50 விழுக்­காடு வரை­யி­லான ஆத­ரவை இந்த மாதத்­தில் பெறு­வர். அதே­போல உண­வுச் சேவை­கள், சில்­லறை வர்த்­த­கம், கலை­கள் மற்­றும் பொழு­து­போக்கு, நிலப் போக்­கு­வ­ரத்து, கட்­டு­மா­னம் மற்­றும் கடல் துறை­யி­னர் 30 விழுக்­காடு வரை­யி­லான சம்­பள ஆத­ர­வுத் தொகை­யைப் பெறு­வர்.

இவை தவிர, உயிர்­ம­ருத்­துவ அறி­வி­யல், துல்­லிய பொறி­யி­யல், மின்­னணு, நிதிச் சேவை­கள், தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பம், ஊட­கம், அஞ்­சல் மற்­றும் தூதஞ்­சல் (கூரி­யர்), இணைய சில்­லறை வர்த்­த­கம், பேரங்­கா­டி­கள் மற்­றும் அக்­கம்­பக்­கக் கடை­கள் போன்­றவை உள்­ளிட்ட இதர எல்­லாத் துறை முத­லா­ளி­களும் 10 விழுக்­காடு சம்­பள ஆத­ரவு வழங்கு தொ­கை­யைப் பெறு­வர்.

ஒவ்­வொருவருக்­கும் எவ்­வ­ளவு வழங்­கப்­படும் என்ற விவ­ரம் அடங்­கிய கடி­தம் தகு­தி­யுள்ள முத­லா­ளி­க­ளுக்கு இம்­மாத இறுதி­ வாக்­கில் அனுப்­பப்­படும். 'மை டேக்ஸ்' இணை­ய­வா­ச­லில் உள்­நு­ழைந்து கடி­தத்­தின் மின்­னி­யல் வடி­வத்தை அவர்­கள் காண­மு­டி­யும்.

இம்­மா­தம் 25ஆம் தேதிக்­குள் 'பேநவ் கார்ப்­ப­ரேட்' வச­திக்­குப் பதிவு செய்­துள்­ள­வர்­களும் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­து­டன் 'ஜைரோ' ஏற்­பாட்­டைச் செய்­துள்­ள­வர்­களும் இம்­மா­தம் 30ஆம் தேதி முதல் தங்­க­ளுக்­கான வழங்கு­தொ­கை­யைப் பெறு­வர். இவற்­றில் இடம்­பெ­றாத முத­லா­ளி­கள் ஜூலை 5ஆம் தேதி முதல் இத்­தொ­கை­யைப் பெறு­வர்.

மே 16 முதல் ஜூலை 11 வரை நடப்­பில் இருக்­கும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளால் கணி­ ச­மா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­யி­ன­ருக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் வேலை ஆத­ர­வுத் திட்­டம் மேம்­ப­டுத்­தப்­பட்டுள்­ளது.

இந்­தக் காலப் பகு­தி­யில் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்­குப் பாதிப்­

ப­டைந்த துறை­யி­னர் 50 விழுக்­காட்டு ஆத­ர­வை­யும் மற்ற துறை­யி­னர் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் உள்ள காலம் வரை 30 விழுக்­கா­டும் ஜூலை 12 முதல் ஜூலை 25 வரை 10 விழுக்­கா­டும் வேலை ஆத­ரவு வழங்­கு­தொ­கை­யைப் பெறு­வர்.

முத­லா­ளி­கள் தங்­க­ளது ஊழி யர்­க­ளுக்­கான மத்­திய சேம நிதி யில் சரி­யான தொகை­யைச் செலுத்­து­மாறு கூட்­ட­றிக்கை

கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

இரு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளூர் ஊழியர்கள் பலனடைவர்