இந்தியாவை மிரட்டும் டெல்டா பிளஸ்; மூன்று மாநிலங்களுக்கு அரசு உத்தரவு

இந்தியாவை மிரட்டும் டெல்டா பிளஸ்; மூன்று மாநிலங்களுக்கு அரசு உத்தரவு

2 mins read

இந்தியாவில் 'டெல்டா பிளஸ்' என்ற புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி கவலை தரும் அம்சமாக இருக்கிறது என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்தப் புதிய கிருமி வேகமாகப் பரவக் கூடியது. நுரையீரல் உயிரணுக்களில் வலுவாக ஒட்டிக்கொள்ளக்கூடியது.

நோய் எதிர்ப்பு மருந்துகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அந்தப் புதிய உருமாறிய கிருமிக்கு அதிகமாக இருக்கிறது என்று அறிவியல் வல்லுநர்கள் குழு ஒன்று மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்து இருக்கிறது.

இதுவரையில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 பேர் டெல்டா பிளஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து அந்தக் கிருமியைக் கட்டுப்படுத்தும்படி மத்திய அரசாங்கம் அந்த மாநிலங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

புதிய உருமாறிய கிருமி உலகின் பல நாடுகளிலும் தலைதூக்கி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல் நாடுகளில் அந்தக் கிருமியால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதனிடையே, தமிழ்­நாட்­டில் கொவிட்-19 தொற்று இன்­னும் ஓரிரு நாட்­களில் ஒடுங்­கி­வி­டும் என்று அந்த மாநில அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஒரு மாதகால­மாக மாநி­லத்­தில் சுகா­தார உள்­கட்டமைப்பு வச­தி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­பதா­க­வும் மூன்­றா­வது அலை தொற்று தலை­தூக்­கி­னாலும் அதைத் திறம்­பட சமா­ளிக்க எல்­லாம் தயா­ராக இருப்­பதா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

மாநி­லத்­தில் மே மாதம் 7ஆம் தேதிக்கு முன் நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 61,441 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

ஆனால் இந்த எண்­ணிக்கை இப்போது 1.34 லட்­சம் பேராக கூடி இருக்­கிறது என்று மருத்­துவ குடும்ப நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன் சட்­ட­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

தமிழகத்தில் புதன்­கி­ழ­மை­ புதிதாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை 6,895 ஆகக் குறைந்­து­விட்­டது என்­றும் அன்று மட்­டும் 13,000 பேர் குண­ம­டைந்து இருப்­ப­தா­க­வும் அர­சு தெரி­வித்­தது.

மே 21ஆம் தேதி புதிதாக பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 36,184 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை அது முதல் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

மரண எண்­ணிக்­கை­யும் வேகமாகக் குறைந்து வரு­கிறது. புதன்­கி­ழமை 194 பேர் மர­ண­ம­டைந்­த­னர்.