ஃபைசரை ஒத்த 'கொமிர்னாட்டி' புதிய தடுப்பூசி வருகிறது

ஃபைசரை ஒத்த 'கொமிர்னாட்டி' புதிய தடுப்பூசி வருகிறது

1 mins read

சிங்­கப்­பூ­ருக்கு 'கொமிர்­னாட்டி' என்ற கொவிட்-19 தடுப்­பூசி வர­வி­ருக்­கிறது.

புதிய தடுப்­பூசி மருந்து இப்­போது பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் ஃபைசர்-பயோ­என்­டெக் மருந்­தைப் போன்றது என்று நேற்று சுகா­தார அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

ஃபைசர் மருந்­தைப் போன்ற அதே நடை­மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்தி கொமிர்­னாட்டி மருந்து தயா­ரிக்­கப்­படு­கிறது என்று அமைச்சு குறிப்­பிட்­டது. புதிய மருந்து ஐரோப்­பா­வில் தயா­ரிக்­கப்­பட்டு நேர­டி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வர­வி­ருக்­கிறது. இந்த இரண்டு மருந்­து­க­ளி­லும் அடை­யாள முத்­திரை மட்­டும்தான் வேறு­பட்டு இருக்­கும் என்றது அமைச்சு.

புதிய மருந்து ஃபைசர்-பயோ­யென்­டெக்/கொமிர்­னாட்டி என்று பதி­வேடு­களில் குறிப்­பி­டப்­படும். சிங்­கப்­பூ­ரில் இப்­போது மொடர்னா என்ற ஊசி மருந்­துக்­கும் அனு­மதி வழங்­கப்­பட்டு இருக்­கிறது.

சினோ­வேக் ஊசி மருந்து இங்கு பதி­யப்­ப­டாத ஒன்­றா­கவே இருந்து வரு­கிறது. இருந்­தா­லும் 24 தனி­யார் சுகா­தா­ரப் பராமரிப்பு மருந்­த­கங்­களில் இதைப் போட்­டுக்கொள்­ள­லாம்.