தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துகிறது சிங்கப்பூர் நாளும் 80,000 தடுப்பூசிகள்

தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துகிறது சிங்கப்பூர் நாளும் 80,000 தடுப்பூசிகள்

3 mins read

தேசிய தடுப்­பூசி இயக்­கத்தை சிங்­கப்­பூர் தீவி­ரப்­ப­டுத்­து­கிறது. நாளை முதல் ஒவ்­வொ­ரு­நா­ளும் 80,000 தடுப்­பூ­சி­கள் வரை போடப்­படும் என்று சுகா­தார அமைச்சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

அதி­க­மா­னோர் தடுப்­பூசி பெற்­றி­ருப்­பது கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த உத­வும். கொவிட்-19 உடன் வாழ்­வ­தற்கு சிங்­கப்­பூர் திட்­ட­மி­டும் வேளை­யில், இது, பய­ணங்­க­ளுக்­கும் அதி­க­மா­னோர் ஒன்று­கூ­டு­வ­தற்­கும் வசதி ஏற்­ப­டுத்­தும்.

தற்­போது ஏறக்­கு­றைய அன்­றா­டம் 47,000 தடுப்­பூ­சி­கள் போடப்­ப­டு­கின்­றன. தடுப்­பூ­சி­கள் முன்­கூட்­டியே கிடைக்­கும்­படி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தைத் தொடர்ந்து, அன்­றாட தடுப்­பூசி எண்­ணிக்கை இரட்­டிப்­பாக்­கப்­ப­டு­கிறது.

மேலும், தற்­போது முதல் ஜூலை மாத நடுப்­ப­குதி வரை­யில் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள கூடு­த­லாக 500,000 புதிய இடங்­களை சேர்க்க சுகாதார அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

திட்­ட­மிட்­ட­படி தடுப்­பூ­சி­கள் வந்து சேர்ந்தால் தடுப்­பூசி போடத் தயா­ராக உள்­ளோ­ரில் பெரும்­பா­லா­னோர் ஜூலை இரண்­டாம் பாதி­யில் முதல் தடுப்­பூ­சி­யைப் பெற்­றி­ருப்­பார்­கள் என்று அமைச்­சு­கள் நிலைப் பணிக்­குழுவின் கூட்டத்தில்­ நேற்று திரு ஓங் தெரி­வித்­தார்.

இலக்கு எட்­டப்­பட்­ட­தும், ஆறு முதல் எட்டு வாரங்­க­ளாக தற்­போது உள்ள இரண்டு தடுப்­பூ­சி­க­ளுக்­­கான கால இடை­வெ­ளியை நான்கு வாரங்­க­ளா­கக் குறைப்­பது பற்றி அமைச்சு ஆரா­யும் என்­றும் அவர் சொன்­னார்.

முடிந்­த­வரை பெரும்­பாலானோருக்கு ஓர­ளவு பாது­காப்பை வழங்க இரு தடுப்­பூ­சி­க­ளுக்கு இடை­யி­லான இடை­வெளி நீட்­டிக்­கப்­பட்­டது. இலக்கை எட்­டி­ய­தும், இரண்­டா­வது தடுப்­பூ­சியை முன்­கூட்­டியே பெறும் வகை­யில் தேதியை மாற்­றிக்­கொள்ள மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­படும் என்று அமைச்­சு­கள் நிலைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ருமான திரு ஓங் கூறி­னார்.

இது, அதி­க­மா­னோர் இரு தடுப்­பூசி ­க­ளை­யும் பெற்று அதி­க­பட்ச பாது­காப்­பைப் பெற வகை­செய்­யும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. திட்­டம் தயா­ரா­னதும் கூடு­தல் விவ­ரங்­கள் அறி­விக்­கப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

12 வய­துக்­கும் 39 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் தடுப்­பூ­சிக்குப் பதிவு செய்ய கூடு­தல் கால அவ­கா­சம் வழங்­கும் நோக்­கத்­தில், அவர்­க­ளுக்­கான இரு வார முன்­னு­ரி­மைத் தடுப்­பூ­சித் திட்ட காலம் ஜூலை முதல் தேதி வரை மேலும் ஒரு வாரத்­துக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

முதல் தடுப்­பூ­சி­யைப் போட ஜூலை நடுப்­ப­குதி அல்­லது இறு­திக்கு பதிவு செய்­தி­ருப்­போர், தேதி­களை மாற்றி, முன்­கூட்­டியே தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­வ­தற்­கான அழைப்பை இன்­னும் பெறாத, தடுப்­பூசி பெற தகுதி உடை­யோர், அடுத்த வாரத்­துக்­குள் தேதி­யைப் பதிவு செய்­து­கொள் வதற்­காக குறுஞ்­செய்­தி­யைப் பெறு­வர்.

ஜூலை 2 முதல், சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் 12 முதல் 39 வய­து­டைய நிரந்­தரவாசி ­கள், நீண்­ட ­காலம் வாழ்வதற்கான விசா வைத்­தி­ருப்­போர் உள்­ளிட்ட அனைத்து மக்­க­ளுக்­கும் தடுப்­பூ­சித் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும். அவர்­கள் தடுப்­பூசி போட பதிவு செய்துகொள்­ள­லாம். தடுப்­பூசி போடு­வ­தற்­கான தேதி­களை முன்­ப­திவு செய்­யும் இணைப்பு, ஜூலை 2ஆம் தேதி முதல் அவர்­க­ளது கைபேசி எண்­க­ளுக்கு குறுஞ்­செய்தி மூலம் அனுப்­பப்­படும்.

ஜூன் 23ஆம் தேதி வரை­யில் மூன்று மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­கள், அதா­வது உள்­ளூர் மக்­கள் தொகை­யில் 53 விழுக்­காட்­டி­னர், குறைந்­த­பட்­சம் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்று திரு ஓங் கூறி­னார்.

ஏறக்­கு­றைய 36 விழுக்­காட்டு மக்­கள் இரண்டு தடுப்­பூ­சி­க­ளு­டன் முழு­மை­யா­கத் தடுப்­பு மருந்தைப் பெற்­றுள்­ள­னர்.

60 வய­திற்கு மேற்­பட்ட முதி­யோ­ரில் 75 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு­முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் அல்­லது தடுப்­பூ­சிக்குப் பதிவு செய்­துள்­ள­னர். இது போதாது என்று கூறிய அமைச்­சர் ஓங், கொரோனா கிரு­மி­யில் இருந்து தங்­க­ளைக் காப்­பாற்­றிக்­கொள்ள அதி­க­மான முதி­யோர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

தேசிய தினத்துக்கு முன்­ன­தாக, மக்­கள் தொகை­யில் மூன்­றில் இரு பங்­கி­ன­ருக்கு முதல் தடுப்­பூ­சி­யை­யா­வது போடு­வது சிங்­கப்­பூ­ரின் இலக்கு என்று மே மாதம் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தி­ருந்­தார். சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூசி இயக்­கம் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தால், தேசிய தினத்திற்குள் மூன்­றில் இரண்டு பங்­கி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூ­சி­யைப் பெறும் வகை­யில் இலக்கை கூட்­ட­லாம் என்­றார் அமைச்­சர் ஓங்.

"இது பேரா­வலான இலக்கு. ஆனா­லும் சாத்­தி­ய­மா­னது," என்­றார் அமைச்­சர். இது ஓர் இடைக்­கால மைல்­கல் என்­றா­லும் மக்­கள்­தொ­கை­யில் மூன்­றில் இரண்டு பங்­குக்­கும் அதி­க­மா­னோர் முழு­மை­யான தடுப்­பூ­சி­யைப் பெறு­வதை சிங்­கப்­பூர் உறு­தி­செய்ய வேண்­டும். அதிக மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தால், கொவிட்-19 உடன் வாழ்­வ­தற்­கான திட்ட வரைவை பணிக்­குழு உரு­வாக்­கும்.

"ஆனால் நாங்­கள் மிக­வும் கவ­னத்­து­டன் இருக்­கி­றோம். இது உரு­மா­றிக்­கொண்டே இருக்­கும் எதிரி. இது தொடர்ந்து அதிர்ச்­சி­க­ளை­யும் மாற்­றங்­களை­யும் முன்­வைத்­த­படி இருக்­கும். ஆனால் இந்தச் சவாலை கடை­சி­வரை எதிர்கொள்ள நாங்­கள் உறு­தி­யு­டன் உள்ளோம்," என்று ஓங் கூறி­னார்.