தடுப்பூசிகளின் செயல்திறனை ஆராய்கிறது இந்தியா

தடுப்பூசிகளின் செயல்திறனை ஆராய்கிறது இந்தியா

2 mins read
ce0568b4-5997-4f0e-aac5-98f9abf05d14
இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் மும்முரமாகியுள்ளது. ஹைதராபாத்திலுள்ள மொத்த காய்கறி சந்தையில் தடுப்பூசி போடப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

இந்­தி­யா­வில் முன்­னணி சுகா­தார ஆய்வு அமைப்­பு­க­ளான, இந்­திய சுகா­தார ஆய்வு மன்­ற­ம் தேசிய கிரு­மி­யி­யல் ஆய்­வுக் கழ­கம் ஆகிய இரண்­டும் புதிய 'டெல்டா பிளஸ்' கொவிட்-19 உரு­மாற்­றக் கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூ­சி­க­ளின் செயல்­தி­ற­னைச் சோதிக்க உள்­ளன. ஆய்வில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கொவிஷீல்ட் ஆகிய தடுப்பூசி மருந்துகள் உட்படுத்தப்பட உள்ளன.

டெல்டா பிளஸ் கிரு­மி­யால் இந்­தி­யா­வில் மகராஷ்டிரா, கேரளா, மத்­திய பிர­தேசம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் 40 பேர் வரை­யில் 'டெல்டா பிளஸ்' தொற்­றால் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது. டெல்டா பிளஸ் கிருமி மிகுந்த வீரி­யத்­து­டன் பர­வும் தன்­மை­கொண்­டது என கூறப்­ப­டு­கிறது.

டெல்டா பிளஸ் உரு­மாற்­றக் கிருமி வேக­மா­கப் பர­வும்­ தன்மை, நுரை­யீ­ரல் உயி­ர­ணுக்­க­ளில் அதி­க­மாக ஒட்­டிக்­கொள்­ளும் தன்மை, மற்­றும் நோயெ­திர்ப்பு சிகிச்­சையை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டது என்று தேசிய கிரு­மி­யி­யல் ஆய்­வுக் கழ­கத்­தின் டாக்­டர் பிரக்யா யாதவ் கூறியுள்­ளார்.

"இந்த அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, ​​டெல்டா பிளஸ் கவலை தரக்­கூ­டி­ய­தாக இருக்­கக்­கூ­டும், மேலும் அதிக கண்­காணிப்பு தேவை. பர­வ­லைக் குறைக்க பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும்," என்­றார் அவர்.

ஆய்வுக்குத் தேவையான கிருமி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆய்வு தொடங்கப்படும் என்றும் டாக்டர் யாதவ் கூறினார்.

இந்­நி­லை­யில் மத்­திய பிர­தே­சத்­தில் டெல்டா பிளஸ் உரு­மாற்­றக் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்ட ஐவ­ரில் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். அவர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை. அம்­மா­நி­லத்­தில் பாதிக்­கப்­பட்ட மற்ற நால்­வ­ரும் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர் என்று அம்­மா­நில மருத்­து­வக் கல்வி அமைச்­சர் விஸ்­வாஸ் சாராங் கூறி­னார்.

சென்­னை­யில் 'டெல்டா பிளஸ்' தொற்று உறுதி செய்­யப்­பட்ட பெண், குண­ம­டைந்து நல­மு­டன் உள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

டெல்டா பிளஸ் இந்­தி­யா­வைத் தவிர இங்­கி­லாந்து, போர்ச்­சு­கல், சுவிட்­சர்­லாந்து, போலந்து, ஜப்­பான், நேப்பா­ளம், சீனா, ரஷ்யா உள்­ளிட்ட ஒன்பது நாடு­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.