சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் 84 வயது மாது உயிரிழப்பு

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் 84 வயது மாது உயிரிழப்பு

1 mins read
b0823bfc-1015-42ff-9dc5-39c921663b2e
-

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் 84 வயது மாது ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது.

புளோக் 115, 116 புக்கிட் மேரா வியூவுக்கு சென்றிருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட கண்காணிப்புப் பரிசோதனையின் ஒரு பகுதியாக இம்மாதம் 15ஆம் தேதி அந்த மாதுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே நாள் அவருக்குத் தொற்று உறுதியானது.

சிங்கப்பூரரான அந்த மாது தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவருக்குப் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் அந்த மாதின் குடும்பத்தாருக்கு உதவி வழங்கி வருவதாக அமைச்சு கூறியது.

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்