இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் சராசரி கொவிட்-19 மரண எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குைறந்துள்ளது. 71 நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அன்று ஆயிரத்துக்கும் குறைவாக 983 கிருமித் தொற்று மரணங்கள் பதி வாகியுள்ளன.
இதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை அன்று இந்த எண்ணிக்கை 1,036ஆக இருந்தது என்று 'த டைம்ஸ் ஆஃப் இந்தியா' வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
இருந்தாலும் ஏற்கெனவே இறந்தவர்களைப் பற்றிய தகவல்கள், குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தற்போது வெளியாகி வருவதால் ஒருநாள் மரண எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக் கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வேளையில் ஒரு நாள் சராசரி மரண எண்ணிக்கை நேற்று மீண்டும் ஆயிரத்துக்கும் மேல் அதி கரித்தது. நேற்று 1,183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்று நேற்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவர்களுடன் சேர்த்து கொரோனாவுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 394,493ஐ தொட்டுள்ளது.
கிருமியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 50,000க்கும் கீழ் குறைந்துள்ளது.
நேற்று ஒரு நாள் மட்டும் 48,698 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,183,143 ஆனது. அதே சமயத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கையும் 29,193,085ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் உருமாறிய டெல்டா-பிளஸ் கிருமி கண்டறியப்பட்டுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு எழுதிய கடிதத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.
பரிசோதனை, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா-பிளஸ் கிருமி, நுரையீரலைக் கடுமையாகப் பாதித்து உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும்.
தமிழகத்தில் இதுவரை ஒன்பது பேர் டெல்டா-பிளஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போதுள்ள தடுப்பூசியே டெல்டா-பிளஸ் கிருமியை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றார்.
"இதன் பாதிப்பு பெரிதாக இல்லை. இந்தத் தொற்று இருந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படவில்ைல. பொதுமக்கள் இந்தப் புதிய உருமாறிய கிருமி குறித்து அச்சமடைவோ பதற்றமடையவோ தேவையில்லை," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

