பேங்காக்கில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்

பேங்காக்கில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்

2 mins read
0e909c30-cd46-4c50-a32a-1db9fe978aee
கெட்டியான அட்டைகளால் உருவாக்கப்பட்ட படுக்கைகளைக் கொண்டு தாய்லாந்தின் பட்டானியில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர். படம்: ஏஎஃப்பி -

தாய்­லாந்­தில் கொவிட்-19 பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தை­ய­டுத்து, தலை­ந­கர் பேங்­காக்­கி­லும் அதற்கு அருகில் இருக்கும் மாநி­லங்­க­ளி­லும் உள்ள உண­வ­கங்­க­ளில் இன்று முதல் அடுத்த ஒரு மாத காலத்­திற்கு அமர்ந்து உண்­ணத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பேங்­காக் பெரு­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் அத­ன­ரு­கில் அமைந்­துள்ள நான்கு மாநி­லங்­க­ளி­லும் இருக்­கும் கட்­டு­மான ஊழி­யர் குடி­யி­ருப்பு முகாம்­கள் பெரிய அள­வி­லான கிருமித்­தொற்று முகாம்­க­ளாக உரு­வெ­டுத்­துள்­ளன. இதையடுத்து, உள்­ளேயும் வெளியேயும் செல்ல முடி­யாத வகை­யில் ஏற்கெனவே அக்குடியிருப்பு முகாம்­க­ளைச் சுற்றி தடுப்­பு­கள் போடப்­பட்­டு­விட்­டன.

தலைநகரிலும் அண்டை மாநிலங்­க­ளி­லும் கடைத்­தொ­குதி­கள் இரவு 9 மணி­யு­டன் மூடப்­பட வேண்­டும். தாய்­லாந்­தி­லும் வேறு ஐந்து மாநி­லங்­க­ளி­லும் 20 பேர்க்­கு ­மேல் கூட­வும் கருத்­த­ரங்­கு­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இரு வாரம் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்றி, தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குப் படிப்­ப­டி­யாகக் கத­வு­க­ளைத் திறந்­து­விட தாய்­லாந்து திட்­ட­மிட்டு வரும் நிலை­யில், இந்­தப் புதிய கட்­டுப்­பாடு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­படுத்த பேங்­காக்­கில் ஊர­டங்கு விதிக்க வேண்­டும் என்று கிளம்­பிய குரல்­க­ளுக்­குப் பிர­த­மர் சான் ஓ சா செவி­ம­டுக்­க­வில்லை. கடும் நட­வ­டிக்­கை­கள் பொரு­ளி­ய­லைப் பாதித்­து­வி­டும் என்ற அவர், மாறாக தடுப்­பூசி போடு­வதை முடுக்­கி­விட வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

சென்ற ஆண்­டில் கொரோனா தொற்றை ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்­திய போதும், தாய்­லாந்­தில் தடுப்­பூசி நட­வ­டிக்கை மந்­த­மா­கவே உள்­ளது. அந்­நாட்­டி­ன­ரில் ஆறு விழுக்­காட்­டி­னரே தடுப்­பூசி போட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்­தில் தாய்­லாந்­தில் புதி­தாக 3,995 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 244,447ஆக உயர்ந்­தது. கிரு­மித்­தொற்­றால் மேலும் 42 பேர் மாண்­டு­போக, மரண எண்­ணிக்கை 1,900ஐத் தாண்­டி­விட்­டது.