சமூக அளவில் நால்வர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 28) புதிதாக ஒன்பது பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அந்த நான்கு பேரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த ஐவரில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,553 ஆக உள்ளது.

