மலேசியா: $48 பில்லியன் உதவித் திட்டம் அறிவிப்பு

மலேசியா: $48 பில்லியன் உதவித் திட்டம் அறிவிப்பு

2 mins read

ஊரடங்கு கால வரம்பின்றி நீட்டிப்பு

மலே­சி­யா­வில் கொவிட்-19 பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், 150 பில்­லி­யன் மலே­சிய ரிங்­கிட் (S$48.4 பி.) மதிப்­பி­லான உத­வித் திட்­டத்தை மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் அறி­வித்து இருக்­கி­றார்.

கொரோனா நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்­களுக்­கும் தொழில்­து­றை­க­ளுக்­கும் உதவ இந்த 'மக்­கள் பாது­காப்பு, பொரு­ளி­யல் மீட்பு' தொகுப்­புத் திட்­டம் இலக்கு கொண்­டுள்­ளது.

"பத்து பில்­லி­யன் ரிங்­கிட் நேரடி நிதி ஆத­ர­வாக வழங்­கப்­படும்," என்று தொலைக்­காட்­சி­வழி நாட்டு மக்­க­ளி­டம் உரை­யாற்­றி­ய­போது திரு முகை­தீன் குறிப்­பிட்­டார்.

"ஓராண்­டுக்­கும் மேலாக கொரோனா பர­வலை எதிர்த்­துப் போராடி வரும் நிலை­யில், மலே­சி­யர்­கள் எதிர்­கொண்­டு­வ­ரும் சிர­மங்­க­ளை­யும் நிலைமை மேம்­படும் வரை­யி­லும் உதவி தொடர வேண்­டும் என்­ப­தை­யும் அறிந்­துள்­ளேன்," என்­றார் அவர்.

சிறப்பு கொவிட்-19 உத­வித் திட்­டத்­தின்­கீழ் 11 மில்­லி­யன் பேர்க்கு, குறிப்­பாக வய­தா­னோர்க்­கும் இன்­னும் திரு­ம­ண­மா­கா­தோர்க்­கும் உதவ 4.6 பில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கப்­படும். அதன்­படி, கீழ்­நி­லை­யி­லுள்ள 40 விழுக்­காட்­டி­னர்க்­கும் இடை­நி­லை­யில் உள்ள 40 விழுக்­காட்­டி­னர்க்­கும் 250 முதல் 1,300 ரிங்­கிட் வரை கிடைக்­கும்.

கொரோனா பர­வல் கார­ண­மாக வரு­மா­னம் இழந்­தோர்க்கு உதவ 500 மில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கப்­படும். இதன்­மூ­லம் ஒரு மில்­லி­யன் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தலா 500 ரிங்­கிட் நிதி­யு­தவி கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

கொரோனா நோய்ப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் இந்த­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து மலே­சி­யா­வில் முழு ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி நேற்­று­டன் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் முடி­வ­டை­ய­வி­ருந்த நிலை­யில், அவை கால வரம்­பின்றி நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

மலேசியாவில் அன்­றாட கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4,000க்கு மேல் இருந்து வரு­வ­தா­லும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாலும் ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்­டின் மக்­கள்­தொ­கை­யில் பத்து விழுக்­காட்­டி­னர் இரண்டு கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொள்­வது, கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்­கான மூன்­றா­வது கார­ணி­யா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடன் தவணைக் காலம்

மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு

புதிய உத­வித்­திட்­டத்­தின்­கீழ், வங்­கி­களில் வாங்­கிய கடனுக்கான தவணையைச் செலுத்த தனி­ந­பர்­களுக்கும் தொழில் நிறு­வன உரி­மை­யா­ளர்­களுக்கும் மேலும் ஆறு மாத கால நீட்டிப்பு வழங்கப்படும்.

முன்­ன­தாக, கடந்த மாத­மும் 40 பில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­பி­லான உத­வித் திட்­டத்­தைப் பிர­த­மர் முகை­தீன் அறி­வித்­தி­ருந்­தார்.

ஆனால், நேரடி நிதி ஆத­ர­வாக ஐந்து பில்­லி­யன் ரிங்­கிட் மட்­டுமே வழங்­கப்­பட்­ட­தால் அத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்ட விதம் குறித்து அர­சி­யல்­வா­தி­கள் சிலர் குறை­கூ­றி­னர்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் நேற்று புதி­தாக 5,218 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட, மொத்த பாதிப்பு 739,266 ஆனது. அங்கு இது­வரை 4,900க்கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்­றால் மாண்­டு­விட்­ட­னர்.