உள்ளூரில் ஐவர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று

உள்ளூரில் ஐவர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
8593525b-a399-4da3-bdb5-2bb91911eb9f
-
Google News Preferred Icon

உள்ளூரில் ஐவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 29) புதிதாக 10 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூரில் தொற்று உறுதியான அந்த ஐந்து பேரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் நால்வர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சிய ஒருவருக்கு கண்காணிப்பு பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த ஐவரில் நால்வருக்கு சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தொற்று உறுதியானது. இங்கு வந்த பிறகு வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது எஞ்சிய ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,563 ஆக உள்ளது.