ஈசூனில் தீ: கருகிய நிலையில் வீடுகள்

3 mins read
d59307ab-f027-4751-9a38-ee874c5db691
(மேல்படம்) புளோக் குடியிருப்பாளர் ஒருவருக்கு அதிகாரி ஆறுதல் கூறினார். தீக்கு இரையான நான்கு வீடுகளில் ஒன்று. படங்கள்: ஷின் மின், சாவ்பாவ் -
multi-img1 of 2

ஈசூன் ரிங் ரோடு, புளோக் 141ல் நேற்று காலை ஏற்­பட்ட தீவி­பத்­தில் பாதிக்­கப்­பட்ட பத்து பேர், மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். காவல் அதி­காரி ஒரு­வ­ரும் அதில் அடங்­கு­வார் என்று கூறப்­பட்­டது.

கட்­ட­டத்­தின் மூன்­றாம், நான்­காம், ஐந்­தாம் மாடி படுக்கை அறை­களில் தீ மூண்­டி­ருப்­பது குறித்­துத் தங்­க­ளுக்­குக் காலை 8.30 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­திற்­குச் செல்­வ­தற்­கு­முன், புளோக்­கின் 10வது மாடி வரை வசிக்­கும் சுமார் 100 குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளின் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­னர். ஆரஞ்சு நிறத் தீப்­பி­ழம்­பு­கள் மூன்று மாடி­க­ளின் வீடு­க­ளைச் சுட்­டெ­ரிக்­கும் காணொ­ளி­கள் வலைத்­த­ளங்­களில் வலம்­வந்த வண்­ணம் உள்­ளன.

மேல் மாடி­களில் உள்ள வீடு­க­ளுக்கு அடர்த்­தி­யான சாம்­பல் நிறப் புகை எழு­வ­தை­யும் காணொ­ளி­களில் பார்க்க முடி­கிறது.

நீரைப் பீய்ச்­சி­டும் மூன்று ஜெட்­க­ளைக் கொண்டு நெருப்பு அணைக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அத்­து­டன் தங்­க­ளு­டைய பணி­நே­ர­மாக இல்­லா­த­போ­தும் அதே வட்­டா­ரத்­தில் இருந்த ஐந்து குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள், மருத்­துவ, தீய­ணைப்­புச் செயல்­பாடு­களில் உத­விக்­க­ரம் நீட்­டி­னர்.

தீ மூண்­ட­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் நேற்று சம்­பவ இடத்­தைப் பார்­வை­யிட்­ட­போது, நான்கு வீடு­கள் முற்­றி­லும் கரு­கிய நிலை­யில் காணப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார். மூதாட்டி ஒரு­வ­ரது வீட்­டில் தீ மூண்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

"மூப்­ப­டை­யும் சமூ­கம் ஒருபுறம், தீச்­சம்­ப­வங்­கள் ஒருபுறம் இருக்க, நாம் எச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது அவ­சி­யம்," என்­றார் அவர். உயி­ரி­ழப்­பு­கள் இல்­லை­யென்­றா­லும் இச்­சம்­ப­வத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு உதவி வழங்­கப்­படும் என் அவர் உறு­தி­ய­ளித்­தார்.

சம்­பவ இடத்­திற்கு நேற்று தமிழ் முரசு செய்­தி­யா­ளர் சென்­றி­ருந்­த­போது, கரு­கிய வீட்­டுச் சுவர்­கள், சித­றிய பொருட்­கள், கரு­கிய வாடை, வாட்­டத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர் முகங்­கள் என சற்று பதற்­றம் நிறைந்த சூழல் நில­வி­யது. இருந்­த­போ­தும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு வசிப்­போர் குழு­வி­னர் ஆறு­தல் கூறு­வ­தைக் காண முடிந்­தது.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­வர்­களில் 80 வயது இந்­திய மூதாட்டி ஒரு­வ­ரும் அடங்­கு­வார் என்று கூறப்­பட்­டது. அவ­ரது உடல்­ந­லம் தற்­போது தேறி வரு­வ­தாக அவ­ரின் அண்­டை­வீட்­டார் தெரி­வித்­த­னர். அவர் உற­வி­னர்­க­ளு­டன் வசித்து வரு­வ­தா­க­வும் சொங் பாங் சமூக மன்­றம் கூறி­யது. தீச்­சம்­ப­வம் ஏற்­பட்ட நேரத்­தில் அந்த மூதாட்டி தனி­யாக இருந்­த­தாக அண்­டை­வீட்­டில் வசிக்­கும் இல்­லத்­த­ரசி லதா, 49, கூறி­னார்.

"பக்­கத்து வீட்­டில் கரும்­புகை சூழத் தொடங்­கி­ய­போது நாங்­கள் அதிர்ச்சி அடைந்­தோம். என் மகன் சப­ரீஷ் உடனே அந்த மூதாட்­டி­யைப் பார்க்­கச் சென்­றார். பதற்­றத்­தில் இருந்த மூதாட்டி, வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­டார். பின்­னர், சில பொருட்­களை மீட்­க­லாமே என்று எண்ணி மீண்­டும் அந்த வீட்­டுக்­குள் போக நினைத்­தார். சப­ரீஷ் அவ­ரைத் தடுத்து பாது­காப்­பாக அங்­கி­ருந்து அழைத்­துச் சென்­றார்," என்று திரு­மதி லதா கூறி­னார்.

மூதாட்டி எங்கு செல்­வ­தென்று தெரி­யா­மல் பத­றி­ய­தால், தான் நிதா­னத்­து­டன் செயல்­ப­ட­வேண்­டி­யி­ருந்­த­தாக பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரான சப­ரீஷ், 22, தெரி­வித்­தார்.

"அக்­கம்­பக்­கத்­தி­னர் உதவி செய்­த­தால் மூதாட்­டி­யைச் சுமு­க­மாக மீட்க முடிந்­தது," என்­றார் சப­ரீஷ்.

கூடு­தல் செய்தி: கி. ஜனார்த்­த­னன்