அமைச்­சர் டான்: மருத்­துவ, மன­நல ஆத­ரவு வழங்­கப்­படும்

அமைச்­சர் டான்: மருத்­துவ, மன­நல ஆத­ரவு வழங்­கப்­படும்

3 mins read

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்காகத் திறக்­கப்­படும் புதிய மருத்­துவ நிலை­யங்­களில் மருத்­து­வச் சேவை­

யு­டன் மன­நல ஆத­ர­வும் வழங்­கப்­படும் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு கட்­ட­மைப்­புக்கு அள­வுக்கு அதி­க­மான சுமை ஏற்­ப­டுத்­து­வ­தைத் தவிர்ப்­பதே இந்­தப் புதிய மருத்­துவ நிலை­யங்­க­ளின் இலக்கு.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக கட்­டப்­படும் ஆறு வட்­டார மருத்­துவ நிலை­யங்­க­ளை­யும் பெரிய தங்­கு­வி­டு­தி­களில் அமைக்­கப்­படும் மூன்று மருத்­துவ நிலை­யங்­க­ளை­யும் ஏற்று நடத்­தும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க மனி­த­வள அமைச்சு ஏலக்­குத்­தகை நடத்­து­கிறது.

புதிய மருத்­துவ நிலை­யங்­கள் வரும் நவம்­பர் மாதம் செயல்­ப­டத் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் ஆறு வட்­டா­ரங்­களில் இப்­பு­திய மருத்­து­வச் சேவை வழங்­கப்­படும். ஒவ்­வொரு வட்­டா­ரத்­தி­லும் 40,000 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு மருத்­துவச் சேவை வழங்­கப்படும்.

ஒவ்­வொரு வட்­டா­ரத்­தி­லும் ஒரு வட்­டார மருத்­துவ நிலை­யம், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வசிக்­கும் இடத்­தில் அமைக்­கப்­படும் மருத்­துவ நிலை­யங்­கள், குறைந்­தது இரண்டு நட­மா­டும் மருத்­து­வக் குழுக்­கள், 24 மணி நேரத் தொலை­பேசி வழி மருத்­துவ ஆலோ­சனை, ஆம்­புலன்ஸ்

மற்­றும் சிறப்­புப் போக்­கு­ர­வ­ரத்­துச் சேவை­கள் இருக்­கும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து இயங்கி வரும் 13 நிலை­யங்­க­ளுக்­குப் பதி­லாக ஒன்­பது வட்­டார மருத்­துவ நிலை­யங்­கள் இயங்­கும்.

எதிர்­கா­லத்­தில் குறை­வான மருத்­துவ நிலை­யங்­கள் இருக்­கும் என்­ற­போ­தி­லும் நிலை­யங்­க­ளின் தரம் தற்­போ­தைய நிலை­யை­விட இன்­னும் உயர்­வாக இருக்­கும் என்று டாக்­டர் டான் தெரி­வித்­தார்.

உதா­ர­ணத்­துக்கு, இயன் மருத்­துவ மையம் போன்று பல்­வேறு வச­தி­கள் இந்­தப் புதிய நிலை­யங்­களில் அமைக்­கப்­ப­டக்­கூ­டும்.

எதிர்­கா­லத்­தில் புதிய கிரு­மித்­தொற்று தலைதூக்கினால் அதனால் பாதிப்­ப­டை­யாத

அள­வுக்கு இந்த மருத்­துவ நிலை­யங்­களை அமைக்க மனி­த­வள அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

காய்ச்­சல், சுவா­சத் தொற்று போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நோயா­ளி­க­ளுக்­காக உயர்­தர காற்று வடி­கட்டி கொண்ட இடங்­களை அமைப்­பது போன்ற திட்­டங்­கள் ஆரா­யப்­ப­டு­கின்­றன.

"வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக நிரந்­தர மருத்­துவ ஆத­ர­வுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தயா­ராக இருக்­கி­றோம். இது ஒரு முக்­கிய மைல்­கல்­லா­கும். இனி வரும் மாதங்­களில் மேலும் பல திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்," என்று அமைச்­சர் டான் தெரி­வித்­தார்.

முதல்கட்ட பரா­ம­ரிப்­புக்­கான செலவை ஊழி­யர்­க­ளுக்­கும் அர­சாங்­கத்­துக்­கும் நிலை­யாக வைத்­தி­ருப்­பது அவ­சி­யம் என்று

டாக்­டர் டான் வலி­யு­றுத்­தி­னார்.

மருத்­துவ நிலை­யத்தை அமைக்­க­வும் அதை இயக்க ஏற்­படும் செலவை ஈடு­கட்­ட­வும் வழங்­கப்­படும் சேவை­க­ளுக்கு மருத்­துவ நிலை­யங்­களால் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும் என்று ஏலக்­குத்­தகை ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

வர்த்­த­கம் நீடித்து நிலைத்­

தி­ருக்க மருத்­துவ நிலை­யங்­களை நடத்­தும் நிறு­வ­னங்­கள் நட­வ­டிக்கை எடுக்­கும்­போ­தி­லும் மருத்­து­வச் சேவை நாடும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு சமா­ளிக்க முடி­யாத செலவை ஏற்­ப­டுத்­தி­விட வேண்­டாம் என்று மனி­த­வள அமைச்சு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான மருத்­துவ நிலை­யங்­களைச் சிறப்­பாக நடத்த எத்­த­கைய அணுகுமு­றை­யைக் கடைப்­பி­டிக்­க­லாம் என்­பது குறித்து மனி­த­வள அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக டாக்­டர் டான் தெரி­வித்­தார்.

கட்­டண வரை­ய­றை­கள் நிர்­ண­யிக்­கப்­ப­டுமா என்­பது குறித்து இப்­போதைக்குச் சொல்ல முடி­யாது என்­றார் அவர்.

ஏற்­பு­டைய, நியா­ய­மான மருத்­து­வக் கட்­ட­ணம் குறித்து அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குத் தடை­யற்ற மருத்­துவச் சேவை கிடைப்­பதைப் புதிய மருத்­துவ நிலை­யங்­கள் உறுதி செய்­யும் என்று மனி­த­வள அமைச்­சின் பரா­ம­ரிப்­புப் பிரி­வின் மருத்துவ இயக்­கு­நர் டாக்­டர் லாம் மெங் சோன் கூறி­னார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் தங்­கு­வி­டுதிகளை நடத்துவோ­ருக்­கும் ஆத­ரவு வழங்க இந்­தப் பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறி­

மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வசிப்­பி­டத்தைப் பொறுத்து, அரு­கில் இருக்­கும் வட்­டார மருத்­துவ நிலை­யம் அல்­லது தங்­கு­வி­டு­தி­களில் உள்ள மருத்­துவ நிலை­யத்­தில் பதிவு செய்­யப்­ப­டு­வர்.

தங்­கள் பரா­ம­ரிப்­பின்­கீழ் இருக்­கும் ஊழி­யர்­கள் தொடர்­பான விவ­ரங்­களை மருத்­துவ நிலை­யங்­கள் வைத்­தி­ருக்­கும்.

ஒவ்­வோர் ஊழி­ய­ருக்­கும் ஒரே ஒரு மருத்­து­வப் பதிவு இருப்­பது உறுதி செய்­யப்­படும்.