கொவிட்-19 தடுப்பூசி மூலம் பெரும்பாலான அதிகாரிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுள்ளதை
சிங்கப்பூர் ஆயுதப் படை உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாக கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு மோச
மடையும்போதெல்லாம் ஆயுதப் படை அதன் பயிற்சி இடங்களை மூடத் தேவையில்லை என்று
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார்.
எனவே, தேசிய சேவையாளர்கள் தொடர்பான நடவடிக்கைகள் தடைபடுவது குறைக்கப்படும் என்றும் ஆயுதப் படைப் பிரிவுகள் முழுவீச்சுடன் செயல்பட இது வழி
வகுக்கும் என்றும் அமைச்சர் இங் கூறினார்.
90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட ஆயுதப் படை அதிகாரிகளும் தற்காப்பு அமைச்சு அதிகாரிகளும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாக டாக்டர் இங் தெரிவித்தார். இம்மாதம் இரண்டாவது வாரத்துக்குள் 92 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும்
போட்டிருப்பர் என்றார் அவர்.
"இது திருப்திகரமான நிலை. நோய் எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுள்ள நிலையை ஆயுதப் படை சாதித்துள்ளது," என்று சிங்கப்பூர் ஆயுதப் படைத் தினத்துக்கு முன்பு மண்டாய் ஹில் முகாமில் அளித்த பேட்டியில் அமைச்சர் இங் கூறினார். நோய் எதிர்ப்பாற்றல் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தேசிய சேவையாளருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டாலும் அது கடுமையானதாக இருக்காது.

