மேலும் மானியம், கடும் நிபந்தனை தேவை

மேலும் மானியம், கடும் நிபந்தனை தேவை

3 mins read

சிங்­கப்­பூ­ரில் முக்­கி­ய­மான நகர இடங்­களில் கட்­டப்­படும் வீவக வீடு­கள் பற்­றிய தங்­கள் கருத்­து­களைப் பெரும்­பா­லான சிங்­கப்­பூரர்­கள் பகிர்ந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.

அத்­த­கைய வீடு­கள் கட்­டுப்­படி­யா­கக்­கூ­டிய விலை­யில் இருப்பதை உறுதி செய்­யும் வகையில் மேலும் மானி­யம் கிடைக்க வேண்­டும் என்­பதை அவர்­கள் ஆத­ரிக்­கி­றார்­கள்.

முதல்­ த­டவை வீடு வாங்­கு­வோருக்­கும் தொடர்ந்து மறு­விற்­பனை வீடுகளை வாங்­கு­வோ­ருக்கும் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக வேண்டும் என்­றும் அவர்­கள் விரும்­பு­கி­றார்­கள்.

இந்த விவ­ரங்­களைத் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார்.

தேசிய இணையம் வழி­யி­லான ஆய்வு, கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி­கள், குழு விவா­திப்­பு­கள், மின்னஞ்­சல் ஆகி­ய­வற்­றின் மூலம் சென்ற நவம்­பர் முதல் 6,500 பேருக்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் கருத்­து­கள், யோச­னை­களைத் தெரி­வித்து வந்­துள்­ள­னர்.

கட்­டப்­படும் வீவக வீடு­கள் எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­வை­யாக இருக்க வேண்­டும் என்­ப­தைச் சாதிப்­பது எப்­படி என்­பது பற்றி சிங்­கப்­பூ­ரர்­கள் பல­வி­த­மான கருத்து­க­ளைத் தெரி­வித்து இருப்­ப­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

நக­ர­ மை­யம், பரந்த தெற்கு நீர்­முனை போன்ற மிக முக்­கி­ய இடங்­களில் கட்­டப்­படும் புதிய அடுக்­கு­மாடி வீடு­கள், விலை­யில் கட்­டுப்­ப­டி­யா­கக் கூடி­ய­வை­யாக, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கக் கூடிய வையாக, சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு எட்­டக் கூடி­ய­வை­யாக இருப்­ப­தற்கு வகை­செய்­யும் கருத்­து­க­ளைத் திரட்­டு­வ­தற்­காக அர­சாங்­கத்­தின் கருத்­த­றி­யும் பிரி­வான 'ரீச்' நடத்­திய பொது­மக்­கள் மெய்­நி­கர் ஈடு­பாட்டு நிகழ்ச்­சி­யில் இந்த விவ­ரங்­களை அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அத்­த­கைய வீடு­களை வாங்­கக் கூடிய நிலை­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் இருக்­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த மேலும் கூடு­த­லாக மானி­யம் தேவை என்று பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் கரு­து­கிறார்­கள்.

அதே­வே­ளை­யில், இதில் சமத்­துவம், நியா­யம் ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்த வேண்டி இருக்கிறது என்­ப­தை­யும் அவர்­கள் தெள்­ளத்­தெ­ளி­வாக உணர்த்தி உள்­ள­னர்.

அதே­போல, அந்­தக் கூடு­தல் மானி­யங்­க­ளைத் திரும்பப் பெறு­வ­தற்­கான சில வழி­க­ளைக் காண வேண்­டும் என்­றும் அவர்­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­தாக அமைச்­சர் கூறி­னார்.

எதிர்­கால பொது வீட­மைப்­பிற்­கான முன்­மா­தி­ரியை வகுப்­ப­தில் அர­சாங்­கம் சமா­ளிக்க வேண்­டிய பல்­வேறு பிரச்­சி­னை­கள் பற்­றி­யும் நேற்று திரு லீ குறிப்­பிட்­டார். முக்­கி­ய­மான இடங்­களில் அமை­யும் வீடு­களை வாங்­கு­வ­தற்கு தகுதி பெறக்­கூ­டிய நிபந்­த­னை­யாக, இப்­போ­தைய பிடிஓ வீடு­க­ளுக்­கான வரு­மான வரம்பு போது­மா­னதா என்ற பிரச்­சி­னை­யும் இருக்­கிறது.

அதோடு, வீவக புதிய வீடுகளை ஒதுக்­கும் விதத்­தைப் பற்றி ஆராய்­வ­தும் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இப்­போது குலுக்­கல் முறை­யில் வீடு­கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­றன.

நீண்­ட­கா­லப்­போக்­கி­லும் அதைத் தொடர்ந்து மறு­விற்­பனைச் சந்­தை­யி­லும் அத்­த­கைய வீடு­கள் கட்­டுப்­ப­டி­யா­கக் கூடி­ய­தாக தொடர்ந்து இருந்து வருமா என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது புதிய வீட்டு மாதிரி­களை வகுப்­ப­தில் மிக­வும் சிர­ம­மான ஒரு சவால் என்­றார் அமைச்­சர். பொது வீட­மைப்பு முன்­மா­திரி என்­பது வெறும் வீட்­டுக் கொள்கை மட்­டு­மல்ல.

அது எதிர்­கால சிங்­கப்­பூ­ரர்­களைப் பாதிக்­கக்­கூ­டிய விளைவு­களைக் கொண்­டி­ருக்­கும் பெரிய சமூ­கக் கொள்­கை­யும் ஆகும் என்று அவர் கூறி­னார்.

அந்த வீடு­கள் விற்­கப்­ப­டும்­போது அவற்­றுக்குக் கொடுக்­கப்­பட்ட கூடு­தல் மானி­யங்­களை மீட்­ப­தற்கு படிப்­ப­டி­யான ஏற்­பாட்டு முறை, ஐந்­தாண்­டு­க­ளை­விட அதி­க­மான குறைந்­த­பட்ச குடி­யிருப்புக் கால வரம்பு முத­லானவை­யும் நேற்று விவா­திக்­கப்­பட்­டன.

அத்­த­கைய வீடு­கள் பர­வ­லான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு எட்­டக்­கூ­டி­ய­வை­யாக தொடர்ந்து இருந்து வரு­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் மறு­விற்­பனை வீடு­களை வாங்க தகு­தி­பெற புதிய நிபந்­த­னை­களை விதிக்­க­லாம் என்­றும் நேற்று யோசனை தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் மிக முக்­கி­ய­மான இடங்­களில் புதிய வீவக வீடு­களைக் கட்­டு­வ­தற்­கான திட்­டங்கள் பற்றி சென்ற நவம்­ப­ரில் முதன்­மு­த­லாக அறி­விக்­கப்­பட்­டது.

அந்­தப் பொது வீட­மைப்­பின் முன்­மா­திரி, முக்­கி­ய­மான இடங்­களில் இடம்­பெ­றும் எதிர்­கால பொது வீட­மைப்­புக்கு மட்­டும் பொருந்­தக்கூடி­ய­தாக இருக்­கும் என்று நேற்று திரு லீ வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

முக்கிய இடங்களில் கட்டப்படும் பிடிஓ வீடுகள்: பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கருத்து பற்றி அமைச்சர் விளக்கம்