கொவிட்-19: சமூக அளவில் ஒருவர் பாதிப்பு

1 mins read
37b5655a-db9a-4482-a339-e5152b7e0418
-

சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களுடன் சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்றின் எண்ணிக்கை 62, 678க்கு உயர்ந்ததாக கல்வியமைச்சு தெரிவித்தது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர், சமூக அளவில் பாதிக்கப்பட்டார். மற்றுமுள்ள ஒன்பது பேருக்கு கிருமித்தொற்று வெளிநாடுகளில் ஏற்பட்டது.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட அந்த நோயாளி, முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவராக இதுவரை அறியப்படவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை 36 பேர் இந்நோயால் இயற்கை எய்தினர், மேலும் 15 பேர் வேறு உடல்கோளாற்றுப் பிரச்சினைகளால் உயிரிழந்தனர்.